Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WC இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்.. ரோகித் சர்மா தவறு செய்தாரா? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

மும்பை: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஏன் முக்கியமான வீரர் என்பது குறித்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது இதுகுறித்து ஷர்துல் தாக்கூர் பேசுகையில், இது எனக்கு பின்னடைவு தான். ஆனால் என்னிடம் இன்னும் ஏராளமான கிரிக்கெட் இருக்கிறது. என் அடுத்த கவனம் ஒருநாள் உலகக்கோப்பை தான். அதேபோல் பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறினார்.

Why bowling All rounder Shardul Thakur is an important player for Team India in ICC World Cup 2023

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதோடு, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஷர்துல் தாக்கூர் தான். மொத்தமாக 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த விக்கெட்டுகளில் பெரும்பாலானவை பார்ட்னர்ஷிப் பிரேக்கராக அமைந்துள்ளது தான் சிறப்பு. அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷர்துல் தாக்கூர் தான் இந்திய பவுலிங் படைக்கு தலைமை தாங்கியுள்ளார்.

இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகிய மூவருமே புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். அதேபோல் டெத் ஓவர்களில் பார்த்தால் பும்ராவை தவிர்த்து இருவருமே சொதப்பி வந்திருக்கிறார்கள். அதேபோல் அதிகளவு மிடில் ஓவர்களில் பந்துவீச வைக்க முடியாத வீரர்களாக இருக்கிறார்கள். ஷர்துல் தாக்கூரை பொறுத்தவரை ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருடன் ஒப்பிடும் போது, அதிக முறை மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

11வது ஓவர் தொடங்கி 42வது ஓவர் வரை ஆட்டத்தின் அனைத்து சூழல்களில் பந்துவீசியுள்ளார் ஷர்துல் தாக்கூர். அதேபோல் ஷர்துல் தாக்கூரால் பிரஷரான சூழல்களில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முடிந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் என்று ஏராளமான முறை இந்திய அணியை தனது பேட்டிங்கால் காப்பாற்றி இருக்கிறார். அதேபோல் கேகேஆர் அணியை போல் ஷர்துல் தாக்கூரை Floater-ராகவும் இந்திய அணியால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளில் 9வது வீரர் வரை பேட்டிங் செய்யக் கூடியவராகவே இருக்கிறார். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஜடேஜாவுடன் முடிவடைந்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மிடில் ஆர்டர் வீரர்களின் நீண்ட நாள் காயத்தில் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் விளையாட வேண்டிய அவசியமும் அதிகரித்துள்ளது.

Story first published: Wednesday, September 6, 2023, 8:52 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+