For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேனுடைய டெஸ்ட் ஆவரேஜ் 99.94 தான்... ஏன் 100 ஆக மாறவில்லை என தெரியுமா? #பிராட்மேன்பிறந்தநாள்

சிட்னி : இன்று சர் டொனால்ட் பிராட்மேனின் 110வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கூகுள் முகப்பு பக்கத்தில் அவரது பிறந்தநாளைக் குறிக்கும் டூடுள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை ஒட்டி அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

பிராட்மேனின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது டெஸ்ட் போட்டிகளில் 99.94 ஆவரேஜ் வைத்திருந்தது. அது ஏன் 100-ஐ எட்டவில்லை என தெரியுமா?

Why Bradman avarage not reached 100 and stuck with 99.94?

இன்று வரை குறைந்த பட்சம் 15 இன்னிங்க்ஸ்களுக்கு மேல் ஆடிய எந்த பேட்ஸ்மேனும் அவரது ஆவரேஜ் அருகில் கூட வரமுடியவில்லை. எனினும், 100 என்ற முழு எண்ணை எட்டாமல், 99.94 என அவரது ஆவரேஜ் நின்றதற்கு காரணம், பிராட்மேன் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டி தான்.

ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு எதிராக 1948ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆடியது. அந்த தொடரின் இறுதிப் போட்டியோடு தான் பிராட்மேன் ஓய்வு பெற்றார். அந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் நான்கு ரன் எடுத்தால், பிராட்மேனின் ஆவரேஜ் 100-ஐ தாண்டும் என்ற நிலை இருந்தது.

எந்த பேட்ஸ்மேனுக்கும் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு வாய்ப்பு அமையாது. எனினும், தன் கடைசி இன்னிங்க்ஸில் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த பிராட்மேன், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஹோல்லீஸ் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.

அந்த போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்க்ஸ் மற்றும் 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் வாய்ப்பும் பிராட்மேனுக்கு கிடைக்கவில்லை.

இது பற்றி பின்னாட்களில் பேசிய பிராட்மேன் அந்த நான்கு ரன்களை நான் எடுத்து ஆவரேஜ் 100 என கிடைத்து இருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என தெரிவித்தார். இந்த விஷயம் பற்றி எனக்கு அப்போது தெரியாது எனவும் கூறினார் பிராட்மேன்.

Story first published: Monday, August 27, 2018, 14:46 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Why Bradman avarage not reached 100 and stuck with 99.94? Do you know the reason?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X