For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேடே! கிரிக்கெட் வீரர்கள் Chewing gum சாப்பிடுவதற்கு பின்னால் இப்படி ஒரு விசயம் இருக்கா?

சர்வதேச கிரிக்கெட்டில் பந்து, பேட் இல்லாமல் கூட சில வீரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் சிவிங்கம் இல்லாமல் சில கிரிக்கெட் வீரர்கள் வரவே மாட்டார்கள்.

இதைப் பற்றி 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாகவே தெரியும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் போன்ற வீரரெல்லாம் வாயை எப்போதுமே மென்று கொண்டே இருப்பார்.

Why cricket Players using chewing gum in the field and its effect

இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களும் கூட இந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் எல்லாம் விளையாடும் போது சிவிங்கம்மை போட்டு வாயில் மென்றுக் கொண்டே விளையாடுகிறார்கள். இந்த நிலையில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு எச்சிலை பயன்படுத்தும் வீரர்கள் ஜெல்லி மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று விதி கூட இருக்கிறது.

ஆனால் சீவிங்கம்க்கு அப்படி எதுவும் தடை விதிக்கப்படவில்லை. அப்படி என்ன அதில் விசேஷம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு மன தத்துவ விஷயம் தான் உள்ளது. பரபரப்பான நெருக்கடியான கட்டத்தில் வாயில் சிவிங் கம்மை போட்டு மென்றால் நாம் கொஞ்சம் கூலாக இருப்போம் என்கிறது விஞ்ஞானம்.

Why cricket Players using chewing gum in the field and its effect

இதனால் தான் பல முன்னணி வீரர்களும் நெருக்கடியான கட்டத்தில் சிவிங்கம்மை போட்டு எதிரணியை மென்று துப்பி விடுகிறார்கள். பொதுவாக பரபரப்பான கட்டத்தில் நாம் சிவிங்கம்மை போட்டு மென்றால், நமது மூளை இவன் ஏதோ சாப்பிடுகிறான். அப்படி என்றால் இவனுக்கு உயிர் போகும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்துக் கொண்டு, உடலில் உள்ள நரம்புகளுக்கு அமைதியாக இருங்கள் என்று கட்டளை இடுமாம்.

இதனால்தான் பல விளையாட்டு வீரர்களும் வாயில் சிவிங்கம்மைப்போட்டு தங்களுக்குள் இருக்கும் பதற்றத்தையும் நெருக்கடிகளையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் சிவிங்கம்மை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இதை வெளியிலிருந்து பார்க்கும்போது பாரு இவர் எப்படி கூலாக இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் தன்னுடைய மூளையை ஏமாற்றவே இந்த சிவிங்கம்மை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 16, 2023, 18:59 [IST]
Other articles published on Aug 16, 2023
English summary
Why cricket Players using chewing gum in the field and its effect அடேடே! கிரிக்கெட் வீரர்கள் Chewing gum சாப்பிடுவதற்கு பின்னால் இப்படி ஒரு விசயம் இருக்கா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+