லட்டு பந்து வீச்சு.. திருப்திகரமான அஸ்வின் சுழல்!
சிட்னி: அஸ்வின் லேட்டாக பந்து வீச வந்தாலும் தனது 10 ஓவரை அவர் முடித்தபோது நல்ல பந்து வீச்சு என்று சொல்லும் வகையில் அமைந்தது.
இந்த 10 ஓவர்களில் அவர் அபாயகரமான கிளன் மேக்ஸ்வெல்லைத் தூக்கி பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார். இல்லாவிட்டால் மிகப் பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலியா இன்னேரத்திற்கு எட்டியிருக்கும்.

- முன்னதாக அஸ்வினுக்கு முன்னதாக விராத் கோஹ்லி ஒரு ஓவர் பந்து வீசினார். அதேபோல ஜடேஜா பந்து வீச வந்தார்.
- ஆஸ்திரேலியாவின் பின்ச், ஸ்மித் ஆகிய இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள்.
- இவர்களுக்கு ஜடேஜா போன்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள்தான் சரியாக இருப்பார்கள்.
- இதனால்தான் ஜடேஜாவை முதலில் களம் இறக்கினார் டோணி.
- இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் சற்று சிரமத்தைக் கொடுப்பார். அதன்படி செய்யவும் செய்தார்.
- உண்மையில் அஸ்வின் பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. சிட்னி பிட்ச்சுக்கு ஏற்றார் போல சிறப்பாக பந்து வீசினார்.
- இருப்பினும் அவரது பந்து வீச்சை ஆஸ்திரேலியர்கள் புத்திசாலித்தனமாக சமாளித்து விட்டனர்.
- இதனால் அஸ்வினுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் மட்டும் சிக்கிக் கொண்டார்.
- என்ன காமெடி என்றால் மேக்ஸ்வெல் மட்டும்தான் அஸ்வினை அடித்து ஆடுவார். ஆனால் இன்று அவர் வீழ்ந்தார்.. மற்றவர்கள் வாழ்ந்தனர்.
- 10 ஓவர்கள் வீசிய அஸ்வின் 42 ரன்களைக் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி ஓய்ந்தார்.
வெல்டன் அஸ்வின்!
Story first published: Thursday, March 26, 2015, 12:20 [IST]
Other articles published on Mar 26, 2015


Click it and Unblock the Notifications