Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் சிறந்த ஸ்பின்னராக இருக்கலாம் அஸ்வின்.. ஆனால் இன்றைய போட்டியில் இடமில்லையே!

மெல்போர்ன்: உலகின் மிகச் சிறந்த ஸ்பின்னர் என்ற பெருமையுடன் வலம் வரும் ஆர். அஸ்வினுக்கு இன்றைய பொழுது சந்தோஷமானதாக இல்லை. அவர் 3வது ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. நீக்கப்பட்டு விட்டார்.

கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு அஸ்வின் சரியான உதாரணம். உலகின் மிக்ச சிறந்த ஸ்பின்னர்களில் தலையாய இடத்தில் இருப்பவர் அவர். ஐசிசி ரேங்கிங்கிலும் முதலிடத்தில் இருப்பவர். ஆனால் இன்றைய மெல்போர்ன் போட்டியில் அவர் இடம் பெறவில்லை.

கேப்டன் டோணி, அஸ்வினை இன்றைய போட்டியில் சேர்க்கவில்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. அதுவும், டோணியே அஸ்வினை இன்றைய போட்டிக்கு வேண்டாம் என்று கூறி விட்டதுதான் பெரிய ஆச்சரியம்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஹீரோ

தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஹீரோ

இந்தியாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் அசத்தலாக பந்து வீசிக் கலக்கியிருந்தார். விக்கெட்களை லட்டு லட்டாக எடுத்துக் குவித்தார். 4 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

மேலும் அவருக்குப் பாராட்டுகளும் குவிந்தன. உலகின் மிகச் சிறந்த ஸ்பின்னர் என்று டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் தற்போது அவரது நிலை தலைகீழாக மாறியுள்ளது.

ஒரு நாள் அணியில் தடுமாற்றம்

ஒரு நாள் அணியில் தடுமாற்றம்

உள்ளூர் டெஸ்ட்டில் கலக்கிய அஸ்வின் தற்போது ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டிகளில் தடுமாறுகிறார். முதல் இரு போட்டிகளிலும் அவரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.

3வது போட்டியில் இடமில்லை

3வது போட்டியில் இடமில்லை

இந்த நிலையில் இன்று நடைபெறும் 3வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அஸ்வின். முதல் ஒரு நாள் போட்டியில் அவர் 68 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். 2வது போட்டியில் 60 ரன்களை வாரி வழங்கிய அவர் விக்கெட் எதையும் எடுக்கவில்லை.

நம்பிக்கையை இழந்து விட்டாரா?

நம்பிக்கையை இழந்து விட்டாரா?

எப்போதுமே அஸ்வின் மீது டோணி அபார நம்பிக்கை வைத்திருப்பார். ஆனால் முதல் இரு போட்டிகளில் அந்த நம்பிக்கையை அஸ்வின் தகர்த்து விட்டதால் இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடமில்லாமல் போய் விட்டதாக கருதப்படுகிரது.

மனீஷ் பாண்டே, அஸ்வினுக்குப் பதில்

மனீஷ் பாண்டே, அஸ்வினுக்குப் பதில்

அதேபோல மனீஷ் பாண்டேவும் இன்றைய போட்டியில் இல்லை. அஸ்வின் பான்டேவுக்குப் பதில் ரிஷி தவன் மற்றும் குர்கீரத் சிங் மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜடேஜாவை மட்டுமே நம்பி இன்றைய போட்டியை இந்தியா சந்திக்கிறது.

பார்க்கலாம், ஜடேஜா அன்ட் கோ என்ன செய்யப் போகிறது என்பதை.

Story first published: Sunday, January 17, 2016, 11:20 [IST]
Other articles published on Jan 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+