Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷி இந்திய கேப்டன் ஆகலாம் அப்போது..".. துலீப் டிராபி தேர்வு குழு சொன்ன விளக்கம்

மும்பை: பெங்களூருவில் ஆகஸ்ட் 23 முதல் தொடங்கவுள்ள 2026 துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் அவருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், கிழக்கு மண்டல தேர்வுக் குழு உறுப்பினர் பிரவஞ்சன் முல்லிக் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பிரவஞ்சன் முல்லிக் பேசுகையில், "அவரை நாங்கள் கேப்டனாக்கவில்லை, துணை கேப்டனாகத்தான் நியமித்துள்ளோம். அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்பட உள்ளார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இருப்பதால் மைதானத்தில் அவர் முழுமையாகச் செயல்படுவார். வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த பொறுப்பை வழங்கியதன் மூலம் அவர் ஒரு தலைவராக மேலும் முதிர்ச்சியடைய முடியும். வயது வளர வளர அவர் நாளுக்கு நாள் சிறந்த பக்குவத்தை அடைந்து வருகிறார்" என்றார்.

Why did Vaibhav Suryavanshi got Vice-Captaincy in Duleep Trophy Selector explains

மேலும், வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே பீகார் மாநில ரஞ்சி அணியின் துணை கேப்டனாக உள்ளார். அண்மையில் நடைபெற்ற 2026 அண்டர்-19 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிளெமிங் இடத்தில் அல்பி மார்கல்.. பயிற்சியாளராக நியமனம்.. சிஎஸ்கே-வுக்கு இல்லை.. ஜேஎஸ்கே-வுக்கு!

பிளெமிங் இடத்தில் அல்பி மார்கல்.. பயிற்சியாளராக நியமனம்.. சிஎஸ்கே-வுக்கு இல்லை.. ஜேஎஸ்கே-வுக்கு!

"இளம் வீரர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவது மிகவும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் கேப்டன் ஆகக் கூட வரலாம். அந்த நோக்கத்தில் தான் இந்த துணை கேப்டன் பதவியை அவருக்கு வழங்கியுள்ளோம். இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக நாங்கள் அவரிடம் எதுவும் பேசவில்லை, இது தேர்வுக் குழுவினரின் ஒருமித்த முடிவாகும். துலீப் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தால், தேசிய தேர்வுக் குழுவினரின் பார்வையில் பட்டு விரைவில் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது" என்று பிரவஞ்சன் முல்லிக் கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, July 30, 2026, 22:33 [IST]
Other articles published on Jul 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+