Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய வீரர்களை சென்னைக்கு அனுப்பாத இங்கிலாந்து.. மாஸ்டர் பிளான்!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி முடித்துவிட்டு இங்கிலாந்து அணி சென்னை வந்துள்ளது. சென்னையில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெஸ்ட்

டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

வீரர்கள்

வீரர்கள்

இதில் முதல் இரண்டு டெஸ்ட்டிற்கான வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், டேனியல் லாரன்ஸ், சாக் கிரேவ்லி, டேனியல் லாரன்ஸ், டொமினிக் சிப்லி, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், பென் பொக்ஸ், ஜோபிரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், டொமினிக் பெஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் போர்ட், ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள்ளனர்.

ஏன்

ஏன்

இந்தியா வரும் இங்கிலாந்து அணியில் பிரைஸ்டோ போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்களை இங்கிலாந்து அணி களமிறக்கும் என்கிறார்கள்.

காரணம்

காரணம்

மூத்த வீரர்களுக்கு இங்கிலாந்து அணி வாய்ப்பு கொடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்றும் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த வருடம் பாதியில் நடக்க உள்ளது டி 20 உலகக் கோப்பையை தொடரில் கவனம் செலுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறுவது இங்கிலாந்துக்கு முடியாத காரியம்.

கஷ்டம்

கஷ்டம்

இதனால் டெஸ்ட் தொடர் மீது கவனம் செலுத்தாமல் டி 20 உலகக் கோப்பை மீது இங்கிலாந்து அணி கவனம் செலுத்த உள்ளது. இதனால்தான் தற்போது இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களை இந்தியா அனுப்பாமல் ஓய்வு கொடுத்துள்ளனர். டெஸ்ட் தொடரில் ஆடினால் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் வேண்டாம்

டெஸ்ட் வேண்டாம்

இது டி 20 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளார். பிரைஸ்டோ இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாமல் போனதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

Story first published: Wednesday, January 27, 2021, 17:44 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+