Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

555 ரன்கள்.. இமாலய இலக்கை எடுத்தும் கூட டிக்ளேர் செய்யாத இங்கிலாந்து? இதுதான் பயங்கர சூட்சமம்

சென்னை: இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து இமாலய இலக்கை எடுத்தும் கூட போட்டியை டிக்ளேர் செய்யாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்கி, இங்கிலாந்து டெஸ்ட் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

நதீம், இஷாந்த் சர்மாவை உள்ளே இறக்கி புதிய வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பவுலர்களால் பெரிய அளவில் விக்கெட் எடுக்க முடியவில்லை.

 எப்படி

எப்படி

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட் மட்டுமே எடுத்து. அதிலும் கூட ஜோ ரூட் களத்தில் இருந்தார். சிறப்பாக ஆடிய சிப்லி 87 ரன்களுக்கு நேற்று அவுட் ஆனார். இன்றும் ரூட் - ஸ்டோக்ஸ் இருவரும் லன்ச் முடிந்த பின்பும் அவுட்டாகாமல் ஆடி வந்தனர்.

விக்கெட்

விக்கெட்

எப்படி போட்டாலும் அடிக்கிறான் என்பது போல இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக இந்திய பவுலர்களை வறுத்தெடுத்தனர். நேற்று நதீம் , சுந்தர் ஓவரில் ரன் சென்றது. ஆனால் இன்றோ பாரபட்சம் இன்றி எல்லா பவுலர்கள் ஓவரில் ரூட் - ஸ்டோக்ஸ் ஜோடி சிறப்பாக அடித்து ரன்களை குவித்தனர்.

82 ரன்கள்

82 ரன்கள்

நீண்ட நேரமாக இந்திய அணி விக்கெட் விழும் என்று எதிர்பார்த்த போது சரியாக நதீம் ஓவரில் ஸ்டோக்ஸ் அவுட்டானார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளிவிட்டு விக்கெட் விழுந்தது. அஸ்வின் ஓவரில் போப் அவுட்டானார். ஆனால் ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் ரூட் அதிரடியாக ஆடி வந்தார். நிலையாக நின்ற ரூட் 218 ரன்கள் எடுத்தார்.

எத்தனை

எத்தனை

தனது 100வது டெஸ்டில் 218 ரன்கள் எடுத்த ரூட் நதீம் பவுலிங்கில் அவுட்டானார். அதன்பின் வந்த பட்லர் 34 ரன்களுக்கு அவுட்டானார். வரிசையாக பட்லர், ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தி இஷாந்த் சர்மா நிம்மதி அளித்தார். 8 விக்கெட் விழுந்த நிலையில் 9 மற்றும் 10வது பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன் அடிக்கும் முடிவில் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

சூட்சமம்

சூட்சமம்

இங்கிலாந்து அணி 555 ரன்கள் எடுத்து உள்ள நிலையிலும் கூட இன்னும் டிக்ளேர் செய்யவில்லை. இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. சென்னை பிட்ச் கடைசி கட்டத்தில் பவுலிங் செய்ய ஏற்றபடி மாறி உள்ளது. இதனால் இன்று இரவு பிட்சுக்கு கொடுக்கப்படும் ஓய்வால், பிட்ச் இன்னும் பவுலிங் பிட்சாக மாறும்.

நாளை காலை

நாளை காலை

நாளை காலை பேட்டிங் இறங்கும் போது வேகமாக சரசரவென்று விக்கெட் விழும். இதுதான் இங்கிலாந்தின் பிளான். முடிந்த வரை ஸ்கோர் எடுத்துவிட்டு, இந்திய அணியை இறங்க வைக்கலாம். முடிந்தால் இந்திய அணியை சுருட்டு பாலோ ஆன் பெற வைக்கலாம் என்று இங்கிலாந்து நினைக்கிறது. நாளை பிட்ச் பவுலிங் பிட்சாக மாறிவிடும் .

பவுன்ஸ்

பவுன்ஸ்

நன்றாக ஸ்விங் ஆகும். ஆண்டர்சனுக்கு ஏற்றபடி பவுன்ஸ் ஆகும். இதனால் எளிதாக இந்திய அணியின் விக்கெட்டை இங்கிலாந்து வீழ்த்த முடியும். இதனால் முடிந்த அளவு நாளை காலையில் ஸ்கோரை ஏற்றிவிட்டு பின் இங்கிலாந்த்து அணி பவுலிங் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்கு அடுத்த மூன்று நாட்கள் கண்டிப்பாக சோதனையாக இருக்க போகிறது.

Story first published: Saturday, February 6, 2021, 17:19 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+