Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

241 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி.. ஆனாலும் பாலோ - ஆன் கொடுக்காத இங்கிலாந்து.. அதிர வைக்கும் பிளான்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஆல் அவுட் ஆகி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இங்கிலாந்து பாலோ ஆன் கொடுக்கவில்லை.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி இன்று நான்காவது நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது. பீல்டிங்கிலும் இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறப்பாகவே செயல்பட்டது.

எப்படி

எப்படி

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் அதிரடியாக 218 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் கிட்டத்தட்ட சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

பேட்டிங்

பேட்டிங்

அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வீரர்கள் மோசமாக திணறினார்கள். ஆனால் இந்திய வீரர்கள் கோலி, ரோஹித், ரஹானே, கில் என்று முக்கிய டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். பண்ட் அதிரடியாக 91, புஜாரா அதிரடியாக 73 ரன்கள் எடுத்து இந்திய அணியை மீட்டனர்.

சுந்தர்

சுந்தர்

ஆனால் அவர்கள் அவுட்டான பின் வாஷிங்க்டன் சுந்தர் மட்டும் அதிரடி காட்டினார். சுந்தர் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் இந்திய அணியில் நிலையாக ஆடவில்லை. இந்திய அணி 337 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. சுந்தர் மட்டும் தனி நபராக போராடினார்.

போராட்டம்

போராட்டம்

வாஷிங்க்டன் சுந்தர் 85 ரன்கள் எடுத்த நிலையில் நாட் அவுட்டாக இருந்தார். இந்திய அணி இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இங்கிலாந்து பாலோ ஆன் கொடுக்கவில்லை. இங்கிலாந்தின் இந்த திட்டம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேள்வி

கேள்வி

இந்திய அணி 379 ரன்கள் எடுக்காத போதிலும் இந்திய அணிக்கு இங்கிலாந்து ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இங்கிலாந்து அணி கூடுதலாக 150 ரன்கள் எடுக்க திட்டமிட்டு உள்ளது. 150 ரன்கள் கூடுதலாக எடுத்தால் இந்தியாவிற்கு 400 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க முடியும்.

 கடைசி நாள்

கடைசி நாள்

அதன்பின் கடைசி நாளில் இந்திய அணியை பேட்டிங் இறங்க சொல்லி, விக்கெட் எடுத்து 400 ரன்களுக்குள் இந்திய அணியை காலி செய்யலாம் என்று இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. பிட்ச் இப்போதே பவுலிங் செய்ய ஏற்றபடி மாறியுள்ளது. கடைசி நாளில் பிட்ச் பேட்டிங் செய்ய கஷ்டமாக இருக்கும் என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பிரஷர் கொடுக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

இலக்கு

இலக்கு

அதிக இலக்கு நிர்ணயம் செய்து, இந்திய அணியை பேட்டிங் இறங்க சொல்லலாம். அதன்பின் இந்திய அணியை சுருட்டலாம் என்று இங்கிலாந்து நினைக்கிறது. போட்டியை டிரா செய்வதை விட வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் இங்கிலாந்து உள்ளது.

Story first published: Monday, February 8, 2021, 12:05 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+