For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனுஷ்காவுடன் இருக்கும் மோதலால்.. நடராஜனை வம்புக்கு இழுக்கும் கவாஸ்கர்.. இதெல்லாம் தேவையா சார்?

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இந்த பிரச்சனையில் தேவையின்றி நடராஜனையும் கவாஸ்கர் உள்ளே இழுத்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக கோலி இந்தியா திரும்பி உள்ளார். கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. நடராஜன் அப்பா ஆன போது அவருக்கு விடுமுறை கொடுக்கப்படவில்லை. ஆனால் கோலிக்கு மட்டும் விடுப்பு கொடுக்கப்படுகிறது, நடராஜன் தனது குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

எப்படி ?

எப்படி ?

கோலியை இப்படி கவாஸ்கர் சீண்ட முக்கிய காரணம் உள்ளது. அனுஷ்கா சர்மா கவாஸ்கருக்கு கொடுத்த பதிலடி ஒன்றுதான் இதற்கு காரணம் ஆகும். ஐபிஎல் தொடரின் போது இந்த சம்பவம் நடந்தது. அதில் பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், கோலி குறித்தும், அவரின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா குறித்தும் பேசியதுதான்இந்த சண்டைக்கு காரணம்.

வரம்பு மீறி

வரம்பு மீறி

இவர் பேசிய சில வார்த்தைகள் வரம்பு மீறி இருந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.வாஸ்கர் தனது வர்ணனையில், கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிக மோசமாக சொதப்பிவிட்டார். லாக்டவுன் நேரத்தில் கோலி சரியாக பயிற்சி செய்யவில்லை. அனுஷ்காவின் பவுலிங்கில் அவர் பயிற்சி செய்து இருப்பார், என்று காவஸ்கர் கூறி இருந்தார்.

பவுலிங்

பவுலிங்

அனுஷ்காவை பவுலிங் செய்ய சொல்லி அதில் கோலி பயிற்சி எடுத்து இருப்பார் என்று பொருள்படும் வகையில் கவாஸ்கர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துதான் தற்போது பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இதை கொஞ்சம் டபுள் மீனிங்கில் கவாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையான நிலையில் அனுஷ்கா சர்மா இதற்கு அதிரடி பதிலடி கொடுத்தார்.

பதிலடி

பதிலடி

அதில், மிஸ்டர் கவாஸ்கர், உங்கள் கருத்து தவறானது. ஒரு நபரின் விளையாட்டு போட்டி குறித்து பேசும் போது அவரின் மனைவி குறித்து இப்படி பேசியது ஏன் என்று நீங்கள் விளக்க வேண்டும். உங்களின் விளக்கத்தை கேட்க நான் காத்து இருக்கிறேன்.. ஏன் ஒரு கணவரின் ஆட்டத்திற்கு அவரின் மனைவி குறித்து இப்படி பேசுகிறார்கள்.

கோபம்

கோபம்

நீங்கள் அதிரடி கருத்துக்களை தெரிவிக்க நான்தான் கிடைத்தேனா? மிஸ்டர் கவாஸ்கர் நீங்கள் ஒரு லெஜெண்ட் . இந்த கிரிக்கெட் உலகில் நீங்கள் பெரிய உயரத்தில் இருப்பவர். நீங்கள் அப்படி சொல்லிய போது, நான் எப்படி உணர்தேன் என்பதை உங்களிடம் கூறிவிட்டேன்., என்று அனுஷ்கா சர்மா மிகவும் கோபமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

சண்டை

சண்டை

இதனால் அப்போதே இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்து இருந்தது. இந்த சண்டையை மனதில் வைத்து தற்போது சரியான நேரத்தில் கவாஸ்கர் கோலியை சீண்டுகிறார். கோலிக்கு விடுப்பு கொடுத்தது தவறு என்று கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இதில் தேவையின்றி நடராஜனை வேறு உள்ளே இழுத்து உள்ளார்.

நடராஜன்

நடராஜன்

நடராஜனுக்கு ஏன் விடுப்பு கொடுக்கவில்லை. நடராஜன் வருத்தத்தில் இருக்கிறார் என்று கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். நடராஜன் அப்படி வருத்தமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் வீரரை தேவையின்றி கவாஸ்கர் சர்ச்சைக்கு உள்ளாக்க பார்க்கிறார்.

Story first published: Thursday, December 24, 2020, 10:22 [IST]
Other articles published on Dec 24, 2020
English summary
Why Gavaskar opposes the paternity leave taken by Virat Kohli suddenly?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+