Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிக்ளேர் பண்ணவே முடியாது.. இங்கிலாந்து அணிக்கு இந்தியா வைத்த பெரிய செக்.. கோலியின் "டயர்ட்" ஆயுதம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக ஆடியும் கூட கேப்டன் கோலி போட்டியை டிக்ளேர் செய்யவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அஸ்வின் அதிரடியாக ஆடி வருகிறார்.இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அஸ்வின் 87 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்தை விட இந்திய அணி 442 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

செய்யவில்லை

செய்யவில்லை

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக ஆடியும் கூட கேப்டன் கோலி போட்டியை டிக்ளேர் செய்யவில்லை. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 400+ ரன்களை எடுத்தும் கூட போட்டியில் இந்திய அணி டிக்ளேர் செய்யவில்லை. இந்திய அணியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

சென்னை பிட்சில் 350 ரன்களுக்கு அதிகமாக சேஸ் செய்வதே மிகவும் கடினமான விஷயம். அப்படி இருந்தும் கூட இந்திய அணி 400 ரன்களை தாண்டியும் ஆடிக்கொண்டு இருக்கிறது. இதற்காக காரணம் இங்கிலாந்து வீரர்களை டயர்ட் செய்யும் யுக்தியாகும். அதாவது இங்கிலாந்து வீரர்களை நீண்ட நேரம் பவுலிங் செய்ய வைக்கும் யுக்தியாகும்.

யுக்தி

யுக்தி

இங்கிலாந்து வீரர்களை நீண்ட நேரம் பவுலிங் மற்றும் பீல்டிங் செய்ய வைத்து, அவர்களை அசதியாக்க வேண்டும். அதன்பின் கடைசி இன்னிங்சில் அவர்களை பேட்டிங் இறங்க செய்தால் அவர்கள் களைப்பாக இருப்பார்கள். இதன் மூலம் எளிதாக இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பதே யுக்தி.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி இதேபோல்தான் செய்தது. இந்திய வீரர்களை நீண்ட நேரம் பீல்டிங் செய்ய வைத்தனர். டிக்ளேர் செய்ய வாய்ப்பு இருந்தும் டிக்ளேர் செய்யவில்லை. இந்திய வீரர்களை களைப்படைய வைத்து இந்திய அணி விக்கெட் எடுத்தது.

இதே யுக்தி

இதே யுக்தி

இதே யுக்தியை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக செய்கிறது. இந்திய அணியின் துணை பயிற்சியாளர் பாரத் அருணும் இதே விஷயத்தை குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்து வீரர்களை களைப்படைய செய்து அதன்பின் அவர்களை பேட்டிங் செய்ய வைக்க கோலி திட்டமிட்டுள்ளார். இதுதான் இந்திய அணி இன்னும் டிக்ளேர் செய்யாமல் இருப்பதற்கான காரணம் ஆகும்.

Story first published: Monday, February 15, 2021, 15:27 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+