For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்திடம் தோற்றதற்கு வண்டி வண்டியாய் காரணம் வச்சுருக்கு இந்திய அணி...!

டாக்கா: வங்கதேசத்திடம் முதல் ஒரு நாள் போட்டியில் தோற்றுப் போனதற்கு ஏகப்பட்ட காரணங்களை கையில் லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது இந்திய அணி. அடடே இவ்வளவு நடந்து போச்சா.. அச்சச்சோ என்று ரசிகர்கள் இதை நம்பி ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் காரணங்களைக் கூறுகிறது இந்திய அணி.

இரு அணிகளும் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின. போட்டி டிரா ஆனது.

அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. நேற்று முதல் போட்டி நடந்தது. பிரமாதமாக பேட் செய்த வங்கதேசம் 307 ரன்களைக் குவித்தது. இந்தியாவும் நன்றாகத்தான் சேஸிங்கைத் தொடங்கியது. ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்தவர்கள் காலரா வந்த கோழி போல ஒடுங்கிப் போய் ஓடி போய் விட்டனர்.

Why India lost to Bangladesh?

பொறுப்பே இல்லாமல் ஆடியவர்கள்தான் நேற்று இந்திய அணியில் அதிகம். முன்னணி வீரர்கள் பலரும் நேற்று சரிவர சோபிக்கவில்லை. விளைவு கேவலமான தோல்வியில் போய் முடிந்தது. தோல்வி குறித்து கேப்டன் டோணி நிறையக் காரணங்களை அடுக்கியுள்ளார். அதிலிருந்து சில...

  • வங்காளதேசம் ஓரு அணியாக சிறப்பாக விளையாடியது. அவர்கள் முதலில் இருந்தே நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
  • மழை எங்களுக்கு உதவியது. இதனால் 300 ரன்னுக்கு கட்டு படுத்தினோம். ஆனால் பேட்டிங் சாதகமாக அமையவில்லை.
  • சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர். குறிப்பாக சுரேஷ் ரெய்னா பங்கு முக்கியமானது.
  • வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சரியாக செய்ய வில்லை. அதை வங்கதேச வீரர்கள் திறம்பட எதிர் கொண்டனர்.

இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் நடுவர் செய்த குழப்பம் வேறு பிடுங்கித் தின்றது.

இந்தியா பேட் செய்தபோது 10வது ஓவரின்போது வங்கதேச கேப்டன் மோர்தசா பந்து வீசினார். அதை எதிர்கொண்ட ஷிகர் தவான் அடித்தார். அது நேராக விக்கெட் கீப்பரிடம் போனது. ஆனால் கீப்பர் முஷிபிகுர் ரஹீம் கேட்ச் பிடிக்காமல் விட்டு விட்டார்.

இதை நடுவர் கவனிக்கவில்லை. டக்கென விரலை உயர்த்தி விட்டார் மேல் நோக்கி. ஆனால் தான் செய்த தவறை உணர்ந்ததும் உடனே நாட் அவுட் என்று அறிவித்தார். இந்த சமயத்தில் தவான் சற்று கிரீஸை விட்டு நகர்ந்து போயிருந்ததைப் பயன்படுத்தி ஸ்டம்ப்பை நோக்கி பந்தை வீசி ரன் அவுட்டாச்சும் கொடுங்க என்று வங்கதேச வீரர்கள் முட்டாள்தனமாக கேட்க, நடுவர் நிராகரித்து விட்டார்.

Story first published: Friday, June 19, 2015, 12:54 [IST]
Other articles published on Jun 19, 2015
English summary
Captain Dhoni says that Bangladesh batsmen faced the pacers with ease and they batted well too. This caused the damage to the Indian team, he added.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+