For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றாவது டெஸ்டில் ஏன் ரிஷப் பந்த்தை களமிறக்க வேண்டும் - காரணங்கள் இதோ

Recommended Video

மூன்றாவது டெஸ்டில் ஏன் ரிஷப் பந்த்தை களமிறக்க வேண்டும்- வீடியோ

பெங்களூரு : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியை போன்ற இந்திய அணியிலும் இளம் வீரர்களை களமிரக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ

அதிரடி ஆட்டக்காரர்

அதிரடி ஆட்டக்காரர்

ரிஷப் பந்த் அண்டர்19 மற்றும் இந்திய ஏ அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கெதிராக சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் எதிரணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வதில் வல்லவர். அவரால் எத்தகைய சூழலிலும் சிறப்பாக விளையாட கூடியவர் என்று இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டால் பாராட்டப்பட்டவர். முதலாவது டெஸ்டில் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தபோது தனது அதிரடியால் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் மாற்றியவர் இளம் வீரர் சாம் கர்ரன். அதே போன்றதொரு அதிரடி ஆட்டக்காரர் நமது அணிக்கும் தேவையே. அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் ரிஷப் பந்த். அவரது சமீபத்திய பார்ம் அதற்கு உதாரணம்.

தினேஷ் கார்த்திக்கின் சொதப்பல்

தினேஷ் கார்த்திக்கின் சொதப்பல்

நிஹதாஸ் கோப்பை வெற்றிக்கு பின் அனைவராலும் உற்று கவனிக்கப்பட்ட ஒரு வீரர் தினேஷ் கார்த்திக். 20 ஓவர் போட்டிகள் மற்றும் இங்கிலாந்தில் நடந்த பயிற்சி ஆட்டம் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் பங்காற்றவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் எடுத்தது மொத்தம் 21 ரன்கள் மட்டுமே. நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ரிஷப்பிடம் தோல்வியின் தாக்கம் இருக்காது

ரிஷப்பிடம் தோல்வியின் தாக்கம் இருக்காது

ரிஷப் பந்த் முதல் இரண்டு போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை. அதனால் அவருக்குள் தோல்வியடைந்த தாக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஒரு நேர்மறையான விளைவை உண்டாக்கும். இவரது பாசிட்டிவ் பேட்டிங் அட்டாக் நமது அணிக்கே சாதகமாக அமையும்.

நீண்ட கால பிளான்

நீண்ட கால பிளான்

மஹேந்திர சிங் தோனியின் டெஸ்ட் போட்டி ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் கீப்பர்களாக பணியாற்றிவர்கள் சாகா,தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்திவ் படேல். இவர்கள் அனைவருமே 30 வயதை கடந்தவர்கள். இதனால் ரிஷப் பந்த்தை தேர்ந்தெடுப்பது இந்திய அணிக்கு ஒரு நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை அணிக்கு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Story first published: Thursday, August 16, 2018, 9:29 [IST]
Other articles published on Aug 16, 2018
English summary
Why india should select rishab pant in 3rd test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+