Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா இருந்த இந்தியா சறுக்கியது எப்படி? இந்தியா யுத்தியில் மெகா சைஸ் ஓட்டை.. சரி செய்யுமா பிசிசிஐ

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி திடீரென்று சரிவை சந்தித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

IND vs SL போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் Srilanka அணி வெற்றி *Cricket

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், அதன் பிறகு நடைபெற்ற பெரும்பாலான டி20 போட்டியில் இந்திய அணி வென்றது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனைத்து டி20 தொடர்களையும் வென்று அசத்தியது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பேட்டிங்கில் தடுமாற்றம்

பேட்டிங்கில் தடுமாற்றம்

லீக் சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தினாலும், ஹாங்காங்கை 151 ரன்கள் வரை அடிக்க வைத்தது. அதன் பிறகு டி20 சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்தியா சொதப்பியது. இதே போன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது.

தவறான முடிவு

தவறான முடிவு

இருத்தரப்பு தொடரில் பாட்ஷா போல் சுற்றி வந்த இந்திய அணி, ஆசிய கோப்பை போட்டி சூப்பர் 4 சுற்றில் ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கம் போல் அடிவாங்கியது. இதற்கு காரணம் , இந்தியா எடுத்த தவறான முடிவுகளே என்ற விமர்சனம் எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா ஒரு அணியை தயார் செய்தது.

ஏன் மாற்றம்

ஏன் மாற்றம்

அந்த அணியில் கேஎல் ராகுல் இல்லை. விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது. ஃபினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் இருந்தார். இந்த பிளானில் இந்தியா சூப்பராக பயணித்து வந்தது. தற்போது ராகுல் திடீரென்று அணிக்குள் வந்துவிட்டார். ஜடேஜா காயம் காரணமாக விலகிவிட்டார். தினேஷ் கார்த்திக் தற்போது பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

திடீர் சறுக்கல்

திடீர் சறுக்கல்

ஃபினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் , இந்திய அணி இன்றைய போட்டியிலும், கடந்த போட்டியிலும் ஒரு 20 ரன்கள் கூடுதல் அடித்திருக்கும். ஜடேஜா இல்லாத நிலையில், அக்சர் பட்டேல் இருந்திருந்தால், அணியின் பெலன்ஸ் சரியாக இருந்திருக்கும். கேஎல் ராகுலுக்கு பதில் சூர்யா அல்லது ரிஷப் பண்டை தொடக்க ஆட்டக்காரராக இந்தியா பயன்படுத்தி இருக்கலாம். இப்படி யுத்தியில் தவறு செய்ததால் இந்திய அணிக்கு திடீர் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, September 6, 2022, 23:10 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+