For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரா அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பியிற்சி.. என்ன காரணம் தெரியுமா? இப்படி ஒன்னு இருக்கோ?

சென்னை : ஒரு காலத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கான ஜெர்சியை அணிந்து வலை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ வெளியிடும் வீடியோவில் எல்லாம் கிரிக்கெட் வீரர்கள் பிரா அணிந்து பயிர் பயிற்சி செய்கிறார்கள்.

இதனை பார்த்து பலரும் ஏன் ஆண்கள் பிரா அணிந்து விளையாடுகிறார்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள். சிலர் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

Why Indian cricketers wearing sports bra during practice explained

இந்த செய்தியில் வீரர்கள் ஏன் பிரா அணிந்து பயிற்சி செய்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். ரசிகர்கள் நினைப்பது போல் அது வெறும் பிரா கிடையாது. உள்ளாடை வடிவில் இருக்கும் அதனை அணிவதன் மூலம் வீரர்கள் பயிற்சி செய்யும் போது எந்த அளவுக்கு கலோரிகளை செலவு செய்கிறார்கள். மேலும் பயிற்சி செய்யும் போது இதயம் எந்த அளவுக்கு துடிக்கிறது. பயிற்சி முடித்தவுடன் இதயம் துடிப்பு எந்த அளவுக்கு கீழே செல்கிறது.

ஒரு பயிற்சியின் போது எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகிறது என்று பல மருத்துவ விஷயங்களை சேகரிக்கும் கருவி அந்த பிராவில் இருக்கிறது.இந்த தரவுகளை வைத்து அந்த வீரர்களுக்கு எந்த உணவுகளை வழங்கலாம். அவருடைய பயிற்சியை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கலாம் போன்ற தகவல்களை தயார் செய்ய உதவும். அதனால்தான் இந்த பிராவை அணிந்து வீரர்கள் பயிற்சி செய்கிறார்கள்.

தற்போது காலம் மாறி வரும் நிலையில் பல்வேறு அணிகளிலும் இந்த பிராவை அணிந்து வீரர்கள் விளையாட வருகிறார்கள். கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என பல விளையாட்டு வீரர்களும் இந்த ஸ்போர்ட்ஸ் பிராவை பயன்படுத்துகிறார்கள். இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இனி யாராவது இந்த உள்ளாடை குறித்து கேட்டார்கள் என்றால் நமது மைகேல் தமிழ் செய்தி தொகுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Story first published: Thursday, August 17, 2023, 17:55 [IST]
Other articles published on Aug 17, 2023
English summary
Why Indian cricketers wearing sports bra during practice explained பிரா அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பியிற்சி.. என்ன காரணம் தெரியுமா? இப்படி ஒன்னு இருக்கோ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+