For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு மட்டும் சலுகையா? நியாயம் கேட்கும் பாக். கேப்டன்.. மைதான சர்ச்சை

துபாய் : இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் இன்று பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவிற்கு என தனி சலுகை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், போட்டி துவங்கும் முன்பே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. அப்படி என்ன சலுகை பெற்றது இந்தியா?

இந்தியா நடத்த வேண்டிய தொடர்

இந்தியா நடத்த வேண்டிய தொடர்

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், பாகிஸ்தான் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, போட்டிகளை அனைவருக்கும் பொதுவாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அங்கே துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

துபாயில் மட்டும் தான் ஆடும்

துபாயில் மட்டும் தான் ஆடும்

இதில் இந்திய அணி துபாயில் மட்டுமே ஆடும் வகையில் போட்டி அட்டவணையில் சலுகை பெற்றுள்ளது இந்தியா. இதன்படி, குரூப் சுற்றில் இந்தியா ஆடும் இரண்டு போட்டிகளும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரூப் சுற்றில் இந்தியா எந்த இடம் பிடித்தாலும் "சூப்பர் போர்" சுற்றில் நடக்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

நியாயம் கேட்கும் பாகிஸ்தான்

நியாயம் கேட்கும் பாகிஸ்தான்

இதை பற்றி பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது, "என்னை பொறுத்தவரை அனைவருக்கும் சமமாகத்தான் அனைத்தும் நடக்க வேண்டும். அது இந்தியாவோ, பாகிஸ்தானோ, மற்ற நாடுகளோ. அபுதாபியில் போட்டிகள் நடத்தினால், அனைத்து நாடுகளும் அங்கே ஒன்றோ, இரண்டோ போட்டிகளில் ஆட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன செய்துள்ளது என்றே புரியவில்லை. அது என்ன காரணமாக இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதை பற்றி விசாரிக்கும்" என கூறியுள்ளார். பாகிஸ்தான் இந்தியா துபாயில் மட்டும் ஆடும் சலுகை பெற்றதை விரும்பவில்லை என தெரிகிறது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

இது சலுகை எல்லாம் இல்லை. முற்றிலும் டிக்கெட் விற்பனை சார்ந்த விஷயம் என கூறியுள்ளது பிசிசிஐ. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "அபுதாபியில் நடந்தால் எங்களால் 7000 டிக்கெட்கள் தான் விற்க முடியும். துபாயில் 27000 டிக்கெட்கள் வரை விற்று இருக்கிறோம். நாங்கள் போட்டியை ஐக்கிய அரபுக்கு மாற்றியதே பாகிஸ்தான் இந்தியாவில் ஆட முடியாது என்ற காரணத்தால் தான்" என கூறினார்.

Story first published: Wednesday, September 19, 2018, 16:24 [IST]
Other articles published on Sep 19, 2018
English summary
Why all Indian matches are in same venue asks Pakistan captain Sarfraz
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+