For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் பேட்டிங் பெயிலியர்… காரணம் இதுதான்.. கொந்தளித்த ரசிகர்கள்

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | இந்தியா சொதப்பல், ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கு

சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், பின்வரிசை வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்ததே, இந்தியாவின் மந்தமான பேட்டிங்கிற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கோலி, ரோகித் சர்மாவை தவிர எந்த வீரரும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மிக மந்தமான நிலையில் விளையாடியதால் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கின்றனர்.

ஆப்கானுக்கு எதிரான கடைசி போட்டியில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அந்த அணியை துவைத்து காய வைத்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்த இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்தது. 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கும் இங்கிலாந்தே இந்த போடு போடும் போது அருமையான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணி சும்மா இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆரம்பமே பேரிடி

ஆரம்பமே பேரிடி

ஆனால், அதெல்லாம் தவிடுபொடியானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆரம்பமே பேரிடி. ஹிட்மேன் ரோகித் 1 ரன்னில் அவுட். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி நிதானமாக விளையாடினார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

கே.எல்.ராகுல் 30 ரன்களில் அவுட்டாக, யாரும் எதிர்பாரக்காத வகையில் 4வது வீரராக விஜய் சங்கர் களமிறங்கினார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம். இருந்தும் சோபிக்கவில்லை. ஒற்றை இலக்கங்களில் ரன்களை கொண்டு வந்து சேர்த்தார்.

வந்தார் தோனி

வந்தார் தோனி

அவர் சந்தித்து 52 பந்துகள் (அதுவும் ஒரு கத்துக்குட்டி அணியுடன்) எடுத்ததோ 28 ரன்கள். எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று வந்த தோனி பொறுப்புடன் விளையாடுவதாக நினைத்து ரசிகர்களின் பொறுமையை இழக்க வைத்தார்.

28 ரன்கள் எடுத்தார்

28 ரன்கள் எடுத்தார்

கோலியும் 67 ரன்களில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். விக்கெட்களை இழந்த நிலையில் ரன்குவிக்க தடுமாறிய தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்

கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியால் ஜெட் வேகத்தில் ரன் சேர்ப்பார் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 7 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 52 ரன்கள் எடுத்தார்.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியின் ஓபனிங் சரியில்லாமல் போனது மிகப்பெரிய பின்னடைவு. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிக்கு ராகுல், ரோகித் ஓப்பனிங்கே முக்கிய காரணம். ஆப்கனுக்கு எதிரான போட்டியில் ஓபனிங் சொதப்பினாலும் பின் வரிசை வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவே ஆடினர்.

நெருக்கடி தரவில்லை

நெருக்கடி தரவில்லை

எந்த வீரரும் ரன்களை குவிக்க வேண்டும், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட வில்லை. குறிப்பாக, 4வது வீரராக களமிறங்கிய விஜய் சங்கருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை அம்போவென்று தவறவிட்டார்.

திணறியது ஆச்சர்யம்

திணறியது ஆச்சர்யம்

பலமான பேட்டிங் லைன் அப் கொண்டிருக்கும் இந்தியா, கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் திணறியது ஆச்சர்யமாகவே இருந்தது. நடப்பு தொடரில் கேப்டன் கோலி, ரோகித் சர்மாவை தவிர எந்த வீரரும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர். ஆப்கனுக்கு எதிரான போட்டி போல் இந்திய அணி அடுத்து வரக்கூடிய போட்டிகளில் பேட்டிங் சொதப்பினால் உலகக் கோப்பை கனவு காலியாக விடும் என்பது தான் ரசிகர்கள் சொல்லும் சேதி.

Story first published: Sunday, June 23, 2019, 0:07 [IST]
Other articles published on Jun 23, 2019
English summary
Why Indian team failed to score big runs against Afghanistan?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+