Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க? எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

கேப்டன் கோலி மற்றும் இந்திய தேர்வுக் குழு ஏன் கேதார் ஜாதவ்வை அணியில் சேர்த்தார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை.

உலகக்கோப்பை தொடரில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல், பாதி தொடரில் அவரை அணியில் இருந்து கழட்டி விட்ட கேப்டன் கோலி, அவரை மீண்டும் ஏன் எடுத்தார்? என்ன தான் நினைத்துக் கொண்டு அணி தேர்வு செய்கிறார்கள்? என்பதே சாமானிய ரசிகனின் கேள்வியாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. அப்போது முதல் இந்திய அணி 2௦23 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருவது போன்ற பிம்பம் ஏற்பட்டது. இளம் வீரர்களை பட்டை தீட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடரை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகள் அணியில் கேதார் ஜாதவ் பெயரை பார்த்ததும் கொஞ்சம் வியப்பாக இருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்டது. அப்புறம் எப்படி மீண்டும் அணிக்குள் வந்தார் என்பதே வியப்புக்கு காரணம்.

கேதார் ஜாதவ் செயல்பாடு

கேதார் ஜாதவ் செயல்பாடு

கேதார் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் சொதப்பினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தாலும், டெஸ்ட் போட்டி போல அவர் மந்தமாக ஆடியது சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 7 ரன்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான சேஸிங்கில் மீண்டும் மந்தமான 12 ரன்கள் எடுத்திருந்தார்.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

இங்கிலாந்து போட்டிக்கு பின் அவரை அணியில் இருந்து கழட்டி விட்டார் கேப்டன் கோலி. அதனால், அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், திடீரென அவர் பெயரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சேர்த்து இருப்பது, இந்திய அணி எங்கே செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்காலம் காலி

எதிர்காலம் காலி

எப்போது கேதார் ஜாதவ்வுக்கு அணியில் இடம் கிடைத்ததோ அப்போதே இந்திய அணியின் எதிர்காலம் காலி என இணையத்தில் கருத்து கூறி வருகிறார்கள் சில ரசிகர்கள். ஆனால், கேப்டன் கோலி பற்றி தெரிந்தவர்கள் இது குறித்து கவலைப்பட மாட்டார்கள்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

காரணம், உத்தேச அணியில் இடம் பெற்ற வீரர்கள் பலர் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்தே பின்னர் நீக்கப்பட்ட கதையெல்லாம் உள்ளது. ஜாதவ் இப்போது உத்தேச அணியில் தான் இருக்கிறார். களமிறங்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.

Story first published: Sunday, July 21, 2019, 20:45 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+