2 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. சபாஷ் நதீமை சம்பந்தமின்றி அணியில் எடுத்தது ஏன்? கோலி மாஸ்டர் பிளான்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர் சபாஷ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் அவரின் முதல் டெஸ்ட் போட்டியாகும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. ஸ்பின் பவுலிங்கிற்கு உதவ கூடிய சென்னை மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அணி
இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எப்படி
இன்று இந்திய அணியில் அக்சர் பட்டேல் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் கடைசி நொடியில் ஆடவில்லை. முறைப்படி இன்று குல்தீப் யாதவ் இறங்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக சபாஷ் நதீம் இறக்கப்பட்டுள்ளார்.

நதீம்
31 வயதான மூத்த வீரர் நதீம் இன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகிறார். அணியில் அஸ்வின், சுந்தர் ஆகிய இரண்டு ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். கூடுதலாக அக்சர் பட்டேலுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டு இருக்கிறார் .

ஏன்
நதீம் இடது கை ஆர்டாக்ஸ் ஸ்டைல் பவுலர். இதனால் இவர் மூலம் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வெளியே பந்து வீச முடியும். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இவர் சவாலாக இருப்பார். இங்கிலாந்து வீரர்கள் இடது கை ஆர்டாக்ஸ் ஸ்டைல் பவுலர்களிடம் அதிகம் திணறுவார்கள்.

இங்கிலாந்து தொடர்
இலங்கை தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இப்படிப்பட்ட ஸ்பின் பவுலிங்கில் அதிகம் திணறினார்கள். இதை பார்த்த கோலி திடீரென சபாஷ் நதீமை அணியில் எடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் இருந்தவரை அணிக்குள் கொண்டு வந்து களமிறக்கி உள்ளார் .


Click it and Unblock the Notifications