பீல்டிங் பண்ணுங்க.. இப்ப ஓவர் கொடுக்க மாட்டேன்.. இளம் தமிழக வீரரை ஒதுக்கிய கோலி.. என்ன காரணம்?
சென்னை: இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் வாஷிங்க்டன் சுந்தருக்கு கோலி முதல் 40 ஓவர் முடியும் வரை ஓவர் கொடுக்காதது கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை 2 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 80+ ரன்களை எடுத்து நிதானமாக ஆடி வருகிறது.
இந்திய அணி சார்பாக பும்ரா 1 விக்கெட், அஸ்வின் 1 விக்கெட் எடுத்துள்ளனர். சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதரவாக இருக்கிறது.

எப்படி
சென்னை பிட்ச் இன்று தொடக்கத்தில் ஸ்பின் பவுலிங் போடுவதற்கு அவ்வளவு ஏற்றதாக இல்லை. ஆனால் போக போக பிட்ச் ஸ்விங் ஆனது. அதிலும் பிட்ச் ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியது. இதனால் ஸ்பீட், ஸ்பின் இரண்டும் நன்றாக பயனளித்தது.

பயன் அளித்தது
இதனால் அஸ்வின் ஓவரில் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள். நதீம் தொடக்கத்தில் நன்றாக பவுலிங் செய்தாலும் பெரிய அளவில் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் எப்போது ஓவர் போடுவார் என்று கேள்வி நிலவி வந்தது.

கேள்வி
பிட்ச் நன்றாக ஸ்விங் ஆகியும் கூட வாஷிங்க்டன் சுந்தருக்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை. முதல் 40 ஓவர் முழுக்க வாஷிங்க்டன் சுந்தர் ஒரு பால் கூட போடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் சீக்கிரமே பந்து வீசினார்.

மோசம்
ஆனால் சுந்தரை கோலி முதல் 40 ஓவரில் பயன்படுத்தவே இல்லை. பிட்ச் போட நல்ல சாதகமான சூழ்நிலை இருந்தும் சுந்தரை கோலி கொஞ்சம் கூட பயன்படுத்தவில்லை. அதன்பின் 41வது ஓவரில்தான் சுந்தர் பவுலிங் செய்ய வந்தார். கோலி ஏன் இவருக்கு தொடக்கத்தில் பவுலிங் செய்ய வாய்ப்பை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications