
தடை விதிப்பு
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டனர். ஓராண்டு தடைக்கு பின் உலக கோப்பையை தொடர்ந்து, ஆஷஸில் இருவரும் களமிறங்கி இருக்கின்றனர்.

சதங்கள் 24
தடைக்கு பின் தனது முதல் டெஸ்ட் இன்னிங்சில் களமிறங்கிய ஸ்மித் சதம் அடித்து கோலியின் சாதனையை முறியடித்தார். அதாவது, கோலி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருந்தார். ஆனால், ஸ்மித்தோ 118 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார்.

நெட்டிசன்கள் கேலி
ஓராண்டு தடைக்கு பின் கலக்கியிருக்கும் ஸ்மித்தை அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலியையும், ஸ்மித்தையும் இணைத்து பதிவு செய்த ட்வீட் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் கேலி செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது.
சதமடிக்காத கோலி?
அகமது என்ற ரசிகர் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், ஸ்மித் ஆஷஸ் தொடரில் 9 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

கிண்டல் டுவீட்டுகள்
ஆஷஸ் தொடர் என்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே மட்டுமே நடக்கும் போட்டி. அதில் கோலி விளையாடவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது கிரிக்கெட் தெரிந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும்.

கேலி பண்ணிய ரசிகர்கள்
இது தெரியாமல் அந்த ரசிகர் பதிவிட, அதை கண்ட மற்ற ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கிண்டல் டுவிட்டுகளை ரிலீஸ் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். பல கிண்டலான பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

ரொனால்டோ ரன்கள்
ஆதித்யா திவாரி என்ற ரசிகர் ஆஷஸ் தொடரில் ஸ்மித் 9 சதம் அடித்துள்ளார். அப்படி என்றால் கிறிஸ்டினோ ரொனால்டோ எவ்வளவு என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆஷஸில் வாசிம்
ரவி போப்ரா என்ற பவுலர் ஆஷஸ் தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் வாசிம் அக்ரம் ஜீரோ விக்கெட் எடுத்துள்ளார் என்று கிண்டலடித்துள்ளார்.

அமீர் எவ்வளவு விக்.
அகமது என்ற ரசிகர் இலங்கை இந்தியா மேட்சில் ஸ்மித் ஒரு சதம் கூட அடிக்க வில்லை என்று வெளுத்திருக்கிறார். மற்றொரு ரசிகரோ நாட்டிங்ஹாம் 4வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட். அப்போ அமீர் எவ்வளவு விக். எடுத்துள்ளார் என்று கேட்டுள்ளார்?

ஐபிஎல் சாம்பியன்
பிரஜாய் நாயக் என்பவர், ஐபிஎல் தொடரில் 4 முறை ரோகித் சர்மா பட்டம் வென்று கொடுத்துள்ளார். ஆனால், சர்பிராஸ் அகமது...? அடடே காத்திருங்கள்... என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











