Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாஷிங்டனை கடைசி வரை ஓரங்கட்டியது ஏன்.. கோலி எடுத்த பரபரப்பு முடிவிற்கு பின்.. இப்படி ஒரு காரணமா?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தரை கோலி ஓரங்கட்டியது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வெற்றிபெறுவதற்கு ஸ்பின் பவுலர்கள் முக்கிய காரணம் ஆகும்.

அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அக்சர் பட்டேல் 11 விக்கெட், அஸ்வின் 7 விக்கெட் எடுத்தனர்.

விக்கெட்

விக்கெட்

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஓவர் வீசவில்லை. அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஒரே ஒரு ஓவர் வீசினார். கடைசி ஓவர் மட்டுமே வாஷிங்க்டன் சுந்தருக்கு கொடுக்கப்பட்டது.

சுந்தர்

சுந்தர்

கோலி முழுக்க முழுக்க அக்சர் மற்றும் அஸ்வினை மட்டுமே பவுலிங் செய்ய பயன்படுத்தினார். இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது. ஆனாலும் கூட வாஷிங்க்டன் சுந்தரை கோலி கடைசி வரை பயன்படுத்தாமல் இருந்தது பெரிய கேள்வி எழுப்பியது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தரை கோலி ஓரங்கட்டியது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது. அஸ்வினும் சுந்தரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பவுலிங் செய்வார்கள். இதில் அஸ்வின் நல்ல ரிதமில் பவுலிங் செய்து வந்தார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

இன்னொரு பக்கம் அக்சர் இடதுகை பவுலர் என்பதால் அவரையும் பவுலிங் செய்ய வேண்டாம் என்று சொல்ல முடியாது . இதன் காரணமாகவே சுந்தரை கோலி இறக்கவில்லை என்கிறார்கள். சுந்தர் முதல் டெஸ்டில் அதிகமாக ரன்களை கொடுத்தார். இந்த பிட்சில் அதிக ரன் சென்றால் அதை அடிப்பது மிகவும் கடினம்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுந்தருக்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை என்கிறார்கள். அதேபோல் முடிந்த அளவு சுந்தரை ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக பயன்படுத்தலாம், விக்கெட்டே செல்லவில்லை, இக்கட்டான சூழ்நிலை என்றால் மட்டும் சுந்தருக்கு ஓவர் கொடுக்கலாம் என்று கோலி நினைத்ததாக கூறப்படுகிறது.

Story first published: Friday, February 26, 2021, 13:10 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+