
எப்படி
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டுக்கான அணியில் இருந்து ஷரத்துல் தாக்கூரை கோலி நீக்கி இருக்கிறார். உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்குள் வர உள்ளதால் இவர் நீக்கப்பட்டுள்ளார். தாக்கூரின் நீக்கம் அணிக்குள் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

நீக்கம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் ஷரத்துல் தாக்கூர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதன்பின் டெஸ்ட் தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் தாக்கூர் அசத்தினார்.கடைசி டெஸ்டில் கப்பாவில் இந்தியா வெற்றிபெற முதல் இன்னிங்சில் தாக்கூர் அடித்த 60+ ரன்கள் முக்கிய காரணமாக இருந்தது.

என்னாச்சு?
பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தாக்கூர் சிறப்பாக ஆடினார். ஆனாலும் இப்போது திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு இவரை அணியோடு இருக்கும்படியும் கூறவில்லை . இவரை விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கு அனுப்பி உள்ளனர்.

மோசம்
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான லிமிடட் ஓவர் போட்டிகளில் இவர் ஆடுவதும் சந்தேகம் ஆகியுள்ளது.இவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு சென்றுள்ளதால் மீண்டும் அணிக்கு வருவாரா என்று கேள்வி உள்ளது. நன்றாக ஆடும் வீரரை திடீரென சமயங்களில் கோலி ஓரம்கட்டுவார்.

முடிவு
அப்படித்தான் இப்போது ஷரத்துல் தாக்கூரும் ஓரம்கட்டப்பட்டு இருக்கிறார். அவர் முடிவில் யாரும் தலையிடுவது கோலிக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஷரத்துல் தாக்கூருக்கு ஆதரவாகவும் அணி தேர்வில் யாரும் குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications