Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்குத்தான் குல்தீப் யாதவ் இலங்கை டெஸ்ட்டில் ஆடணும்னு சொல்றோம்.. பெரிய லிஸ்ட் போட்ட விமர்சகர்கள்

சென்னை: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஏன் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்பதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் பல்வேறு முக்கியக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் இரண்டவது வாரத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடரில், வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளதால், குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. அவர் ஏன் விளையாட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ:

Why Kuldeep Yadav must play in Sri Lanka Tests Experts points out key reasons

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள்

இலங்கை ஆடுகளங்கள், குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள கல்லே மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமானது. இதுபோன்ற சாதகமான சூழலில் சிறந்த மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீவ் யாதவ் எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பார்.

அபாரமான ஃபார்ம்

கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக உள்ளார். இது ஜடேஜாவின் விக்கெட்டுகளை (18 விக்கெட்கள்) விட அதிகம். டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சிறந்த டெஸ்ட் சாதனைகள்

இதுவரை விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் அவர் 22.35 சராசரியுடன் 79 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 38-க்கு கீழ் உள்ளது. அஸ்வினுக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதை குல்தீப் யாதவ் எப்போதோ நிரூபித்து விட்டார்.

இலங்கை மண்ணில் முந்தைய அனுபவம்

கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போதைய இந்திய அணியில் இலங்கையில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் கொண்ட மூவரில் (ஜடேஜா, கே.எல். ராகுல் ஆகியோருடன்) குல்தீப்பும் ஒருவர்.

தனித்துவமான பந்துவீச்சு முறை

இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், பந்துவீச்சில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்துவார். இது வலது கை பேட்டர்களை வீழ்த்துவதற்கு பெரிதும் உதவும். மேலும், அவர் வெறும் ரன்களைக் கட்டுப்படுத்துபவர் அல்ல, விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்.

இந்த காரணங்களை கூறும் விமர்சகர்கள் குல்தீப் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளின் பிளேயிங் லெவனிலும் இடம் பெற வேண்டும் எனக் கூறுகின்றனர். பயிற்சியாளர் கம்பீர் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்.

Story first published: Sunday, August 2, 2026, 15:08 [IST]
Other articles published on Aug 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+