Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து காயம்.. சீட்டு கட்டு போல சுருண்டு விழும் இந்திய வீரர்கள்.. என்ன காரணம்? பரபர பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருக்கும் முக்கியமான வீரர்கள் பலர் காயம் அடைந்தனர். வரிசையாக இந்திய அணியின் டாப் வீரர்கள் எல்லோரும் காயம் அடைந்தனர்.

இப்படி பல வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை கணித்தே 30+ வீரர்களை இந்திய அணி தேர்வு செய்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியது. ஆனாலும் இதில் பெரும்பாலான வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ளனர்.

காயம்

காயம்

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா காயம் அடைந்தார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில்தான் ரோஹித் சர்மா இணைந்தார். ஐபிஎல் தொடரின் போதே புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா இருவரும் காயம் அடைந்தனர்.

வரிசையாக காயம்

வரிசையாக காயம்

அதன்பின் வரிசையாக ஷமி, உமேஷ் யாதவ் காயம் அடைந்தனர். பின்னர் கே. எல் ராகுல் காயம் அடைந்தனர் . இடையில் பண்ட், சைனி காயம் அடைந்து மீண்டுவந்தனர். இதன்பின் ஜடேஜா, விஹாரி காயம் அடைந்தனர்.

சிக்கல்

சிக்கல்

இப்படி வரிசையாக இந்திய வீரர்கள் காயம் அடைந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் பும்ராவும் காயம் அடைந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து இந்திய அணி ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.

காரணம்

காரணம்

இந்திய வீரர்கள் பலரும் லாக்டவுன் காலத்தில் வீட்டில் சரியாக பயிற்சி இல்லாமல் இருந்துள்ளனர்.அதன்பின் போதிய பயிற்சி இன்றி நேரடியாக ஐபிஎல்லில் ஆடினார்கள். இதனால் ஐபிஎல்லின் போதே ரோஹித், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் காயம் அடைந்தனர்.

 இடைவெளி

இடைவெளி

பல நாட்கள் இடைவெளி விட்டு களமிறங்கியதால் மீதம் இருக்கும் வீரர்களும் ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்தனர். போதிய பயிற்சி இல்லாமல் நேரடியாக ஆஸ்திரேலிய தொடர் சென்றதும் லாக்டவுனில் சில வீரர்கள் பயிற்சி இன்றி கஷ்டப்பட்டதுமே இப்படி இந்திய வீரர்கள் காயம் அடைய காரணம் என்கிறார்கள்.

அஸ்வின்

அஸ்வின்

தவான், கில், ரஹானே, கோலி போன்ற வீரர்கள் லாக்டவுனில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். இதனால் இவர்கள் யாரும் காயம் அடையாமல் ஆடி வருகிறார்கள். இப்படிப்பட்ட காயங்களில் இருந்து இந்திய வீரர்கள் மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகலாம் என்கிறார்கள்.

Story first published: Tuesday, January 12, 2021, 12:19 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+