For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏமாற்றம்.. திறமை இருந்தும் தொடர் புறக்கணிப்பா? - மயங்க் அகர்வாலின் "பரிதாப" நிலை

சவுத்தாம்ப்டன்: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்படாதது குறித்து சமூக தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (ஜூன் 18) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் ஓப்பனிங் வீரர்களாக ரோஹித் ஷர்மா - ஷுப்மன் கில் ஆகிய இருவரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து சமூக தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ரோஹித்தின் கன்சிஸ்டன்சி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கை, மாயங்க் அகர்வாலை எப்படி நம்பாமல் விட்டது என்பது தான்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

அதாவது, ஓப்பனிங் ஸ்லாட்டில் ரோஹித் மற்றும் ஷுப்மன் தான் அணியில் இருக்கின்றனர். அப்படியெனில், இவர்கள் இருவர் மட்டும் போதுமா, மாற்று ஆப்ஷன் வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்போது, மீண்டும் வெளியில் இருந்து யாராவது அணியில் சேர்க்கப்படுவார்களா என்று குறிப்பிட்டுள்ளனர்.

புறக்கணிக்கப்படுகிறாரா மாயங்க்?

புறக்கணிக்கப்படுகிறாரா மாயங்க்?

மயங்க் அகர்வால் திறமையான வீரராக இருந்தும், அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவே விமர்சிக்கப்படுகிறது. அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1052 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 243. திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், அவருக்கான வாய்ப்பு நிலையாக இல்லை என்பதே இங்கு பிரச்சினை. ஒரு போட்டியில் விளையாட வைப்பது. பிறகு அடுத்தடுத்து நான்கைந்து போட்டிகளில் உட்கார வைப்பது என்பது தான் அவரை சுற்றி நடக்கும் விஷயமாகும்.

கிரிக்கெட் சென்ஸ்

கிரிக்கெட் சென்ஸ்

எனினும், இந்த வருட தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் அவர் இம்ப்ரெஸ் செய்யும் விதமாக விளையாடவில்லை. இந்த ஒரு விஷயத்தையும் விமர்சிப்பவர்கள் மறந்துவிடக் கூடாது. அபாரமான டெஸ்ட் கிரிக்கெட் சென்ஸ் உள்ள வீரர் என்றாலும், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை எனில், அணியில் மீண்டும் இடம் கிடைப்பது கடினம் தான்.

மெகா சக்தி

மெகா சக்தி

அந்த வகையில், அடுத்த கருண் நாயராக மயங்க் ஆகிவிடுவாரோ என்ற அச்சமும் இருக்கிறது. ஏனெனில், கருண் நாயர் முச்சதம் அடித்தவர். ஆனால், அடுத்தடுத்து சில போட்டிகளில் சறுக்க, அதன்பிறகு அணியில் இருந்தே காணாமல் போனார். அதுபோல் மயங்க் அகர்வால் நிலைமையும் ஆகிவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணம். இதில், ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ரோஹித் போன்ற சில வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், சில வீரர்களுக்கு அதுபோன்ற அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் பல வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து அதில் தனது திறமையை நிரூபித்தவர் தான் ரோஹித். இவருக்கு கிடைத்த வாய்ப்பில் பாதி ராபின் உத்தப்பாவுக்கு கிடைத்திருந்தால், அவர் இந்திய அணியின் மெகா சக்தியாக உருவாகியிருப்பார் என்பதே நிதர்சனம்.

பிளேயிங் 15

பிளேயிங் 15

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா

Story first published: Wednesday, June 16, 2021, 17:46 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
mayank agarwal omitted wtc final 2021? - மயங்க் அகர்வால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+