Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆளை விடுங்கடா சாமி.. கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துனதே போதும்.. தெறித்து ஓடிய 2 வீரர்கள்!

Recommended Video

Mitchell Starc and Joe Root opts out of ipl 2020 auction

கொல்கத்தா : 2020 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர் இரண்டு முன்னணி வெளிநாட்டு வீரர்கள்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தான் அந்த வீரர்கள்.

கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு நேர்ந்த சில சம்பவங்களால் தான் அவர்கள் மீண்டும் ஐபிஎல் ஆட விருப்பமில்லாமல் விலகி விட்டார்கள் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஐபிஎல் ஏலம் 2௦20

ஐபிஎல் ஏலம் 2௦20

2௦20 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடைபெற உள்ளது. இந்த முறை ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் தங்கள் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில் 258 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம்.

இரு வீரர்கள் விலகல்

இரு வீரர்கள் விலகல்

இந்த முறையும் இரண்டு முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயர்களை கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் மற்ற உள்ளூர் தொடர்களில் ஆடி வருகின்றனர். அதனால், அவர்களது ஐபிஎல் விலகல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

தி ஹண்ட்ரட் தொடர்

தி ஹண்ட்ரட் தொடர்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 100 பந்துகள் போட்டியான தி ஹண்ட்ரட் தொடரில் மிட்செல் ஸ்டார்க், ஜோ ரூட் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அந்த தொடரில் ஐபிஎல் தொடரை விட குறைவான தொகையே வருவாயாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டனர்

பாதிக்கப்பட்டனர்

மிட்செல் ஸ்டார்க், ஜோ ரூட் - இந்த இரண்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் மீண்டும் தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜோ ரூட் நிலை

ஜோ ரூட் நிலை

ஜோ ரூட் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் ஏலத்தில் பங்கேற்றார். சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், டெஸ்ட் வீரராகவே அறியப்படும் ஜோ ரூட்டை அந்த ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

ஐபிஎல் தொடரே வேண்டாம்

ஐபிஎல் தொடரே வேண்டாம்

அப்போது முதல் ஐபிஎல் தொடரே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரூட். 2019 ஐபிஎல் ஏலத்திலும் அவர் பங்கேற்கவில்லை. 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெற, ஐபிஎல்-ஐ அவர் பயன்படுத்துவார் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், அவர் ஐபிஎல் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2015 ஐபிஎல் தொடரில் தான் ஆடினார். அதன் பின் 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.

கசப்பான அனுபவம்

கசப்பான அனுபவம்

பெரிய தொகை கொடுத்து வாங்கினாலும், ஸ்டார்க் அந்த தொடரில் பந்துவீசும் வாய்ப்பை பெறவில்லை. 2019 ஐபிஎல் தொடருக்கு முன் அவரை எந்த காரணமும் இன்றி விடுவித்தது கொல்கத்தா அணி.

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

அந்த கசப்பான அனுபவத்துக்குப் பின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இந்த முறையும் ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதே சமயம், தி ஹண்ட்ரட் தொடரில் 1.1 கோடிக்கு ஆட இருக்கிறார் ஸ்டார்க்.

ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல்

ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல்

இந்த இரண்டு நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்-லை புறக்கணித்தாலும், கடந்த சீசனில் ஒதுங்கி இருந்த ஆரோன் பின்ச், கிளேன் மேக்ஸ்வெல் 2020 ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை கொடுத்துள்ளனர். இருவரும் அதிரடி வீரர்கள் என்பதால் இவர்களை வாங்க போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.

Story first published: Wednesday, December 4, 2019, 20:05 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+