Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது ஷமி ஏன் ஆஸ்திரேலியாவில் தேவை??.. கொரோனா பாதித்தும் ரிஸ்க் எடுப்பது ஏன்?? - காரணம் இதோ!

பெர்த்: ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமி தான் கண்டிப்பாக விளையாட வேண்டும் என பிசிசிஐ முடிவெடுத்ததற்கான காரணத்தை பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஒரு வாரத்திற்கு முன்பே ஆஸ்திரேலியா சென்ற போதும், பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை அறிவிக்கவே இல்லை.

முகமது ஷமி ஏன்?

முகமது ஷமி ஏன்?

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக சீனியர் வீரர் முகமது ஷமி தான் சேர்க்கப்படுகிறார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் அட்டகாசமாக விளையாடிய முகமது சிராஜுக்கு வாய்ப்பு தராத பிசிசிஐ, கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடாத ஷமிக்கு வாய்ப்பு தந்தது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

அப்படி ஏன் முகமது ஷமியே வேண்டும் என பிசிசிஐ நினைக்கிறது என்பதை பார்க்கலாம். அயல்நாட்டு வீரர்களை நன்கு அறிந்து வைத்தவர்களாக பும்ராவுக்கு பின் முகமது ஷமி தான் இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டுக்கு பின்பு ஷமியின் டி20 வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 45 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய களத்தில் ஷமிதான் சரிபட்டு வருவார்.

எப்படி தெரியுமா?

எப்படி தெரியுமா?

ஆஸ்திரேலிய களங்கள் வேகத்திற்கும், பவுன்ஸுக்கும் அதிக சாதகமாக இருக்கும். ஆனால் பவுண்டரிகளும் தூரமாக இருக்கும் என்பதால் ஷமியின் பவுன்சர்கள் பேட்ஸ்மேனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி கேட்ச்-க்கு வாய்ப்பு உருவாகும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பவுலருக்கும் ஒவ்வொரு பவுலிங் ஸ்டைல் பலமாக இருக்கும். அதுபோன்று முகமது ஷமி குறைந்த வேகத்திலேயே ஸ்விங் செய்வார் என்பதால் ஆஸ்திரேலிய களத்தில் நன்கு எடுபடும். ஆனால் சிராஜுக்கு வேகம் மட்டுமே உள்ளது.

ஷமிக்கு அனுபவம் இல்லை

ஷமிக்கு அனுபவம் இல்லை

ஆஸ்திரேலியாவில் முகமது ஷமி பெரியளவில் டி20 ஆடியதில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ரெக்கார்ட் உள்ளது. 13 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். சிராஜ்-க்கு இன்னும் அனுபவம் இல்லாததால் பும்ராவின் இடத்தை நிரப்ப அவர் சரியான தேர்வாக இருக்க மாட்டார். ஷமிக்கு நல்ல அனுபவம் இருப்பதால் ஓரிரண்டு போட்டிகளிலேயே பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார்.

Story first published: Friday, October 14, 2022, 18:18 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+