
274 ரன்கள் இலக்கு
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஜெயவர்தனேவின் சதம் (103) காரணமாக, 274 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமலும் சச்சின் 18 ரன்களிலும் மலிங்கா ஓவரில் அவுட்டானார்கள். இதனால், இலங்கை கேம்ப்பில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தத்து.

ஆர்டர் மாற்றி இறங்கிய தோனி
இந்த சூழலில் கவுதம் கம்பீர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 122 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அவுட்டானார். இடையில் விராட் கோலி 35 ரன்கள் அடித்து நம்பிக்க்கை அளித்தார். தில்ஷன் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோலி வெளியேறிய பிறகு, அணியில் களமிறங்கியிருக்க வேண்டியவர் யுவராஜ் சிங் தான். ஆர்டர் படி அவர்தான் களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி அங்கு களமிறங்கினார். உலகக் கோப்பையில் அரையிறுதி உட்பட எந்த போட்டியிலும் தோனியால் சிறப்பாக விளையாடவே முடியவில்லை. ரன்களே அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

முரளிதரன் பதில்
இந்த நிலையில், இறுதிப் போட்டியில், நான்காவது விக்கெட்டுக்கு தோனி களமிறங்க ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். இன்று வரை, யுவராஜுக்கு முன்பு தோனி களமிறங்கியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முதன் முறையாக அப்போட்டியில் இலங்கை அணியில் விளையாடிய முத்தையா முரளிதரன் அதற்கான காரணத்தை தனது பார்வையில் இருந்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கோலி அவுட்டான பிறகு யுவராஜ் சிங் தான் களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், தோனி வந்தார். அதற்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பது, எனது தூஸ்ரா பந்துகளை யுவராஜ் சிங்கால் சரியாக ரீட் செய்ய முடியாது என்று தோனி நினைத்திருக்கலாம். எனது தூஸ்ரா பந்துகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது, பல முறை பயிற்சியின் போது, தோனி எதிர்கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் என்னை எளிதில் ரீட் செய்துவிடுவார்.

லக்ஷ்மன்
அதேசமயம், யுவராஜ் சிங் எப்போதுமே எனது தூஸ்ரா பந்துகளில் தடுமாறுவார். இதனாலேயே தோனி ஆர்டர் மாற்றி களமிறங்கியிருப்பார் என நான் நம்புகிறேன். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் எனது தூஸ்ரா பந்துகளை ரீட் செய்வார். லக்ஷ்மனும், கம்பீரும் நன்றாகவே கணிப்பார்கள். டிராவிட் அந்த அளவுக்கு கணிப்பதில் தடுமாறுவார். சேவாக் எப்போதும் எனது பந்துகளை சரியாக கணிப்பாரா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இலங்கை அணியில் மகேலா ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, அரவிந்த டி சில்வா, மார்வன் அட்டப்பட்டு ஆகியோர் எனது பந்துகளை சரியாக ரீட் செய்வார்கள். ஆனால், தில்ஷன் சுத்தமாக கணிக்க முடியாமல் தடுமாறுவார்" என்று முரளிதரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











