Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடியோடு மாறப்போகும் சிஎஸ்கே.. பிளெமிங்கை நீக்கிவிட்டு ஜாகீர் கானை தோனி தேர்வு செய்த பின்னணி

சென்னை: கடந்த 18 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்த ஸ்டீபன் பிளெமிங்கை நீக்கி விட்டு ஜாகீர் கானை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் பின்னணியில் சிஎஸ்கே அணியை முற்றிலும் மாற்றி அமைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இனி சிஎஸ்கே அணியில் பழைய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது எனவும், அதிரடி பேட்டிங் திறன் உடைய வீரர்களுக்கும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியில் 2024-ல் 5-வது இடம், 2025-ல் கடைசி இடம் மற்றும் 2026-ல் 8-வது இடம் என தொடர்ந்து 3 சீசன்களாக சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் படுதோல்வி அடைந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் காத்து பின்னர் அதிரடி காட்டும் சிஎஸ்கே-வின் பழைய ஃபார்முலா, 220 ரன்கள் சாதாரணமாக அடிக்கப்படும் நவீன டி20 கிரிக்கெட்டில் எடுபடவில்லை.

Why MS Dhoni Picked Zaheer Khan to Replace Stephen Fleming as CSK Head Coach Real Reason

2024 முதல் ஐபிஎல் தொடரிலேயே மிகக் குறைந்த ரன் ரேட் கொண்ட அணியாக சிஎஸ்கே பின்தங்கியது. இந்தத் தேக்க நிலையை உடைத்து அணியை நவீனப்படுத்தவே, தோனியின் நேரடிப் பரிந்துரையின் பேரில் ஜாகீர் கான் புதிய தலைமை பயிற்சியாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சின் சச்சின் டெண்டுல்கர் என தோனியால் புகழப்பட்ட ஜாகீர் கான், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் வல்லவர். மும்பை இந்தியன்ஸ் அணி 2019 மற்றும் 2020-ல் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியின் இயக்குனராக இருந்தார். அப்போது நிர்வாக ரீதியாக மிகச் சிறந்த அணியை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

ஜாகீர் கானின் வருகையால் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய ஜாகீர் கான் ஆலோசனை பெறுவது அவர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தையும் சிறப்பானதாக மாற்றும்.

"என்னிடம் இருந்து தங்கம் பறிக்கப்பட்டது".. ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற சுச்சிகா தரியால் பேட்டி

முன்பு ஜாகீர் கான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்யும் பணியையும் செய்துள்ளார். எனவே, சிஎஸ்கே அணியில் பழைய வீரர்களையே மீண்டும் வாங்கும் வழக்கமான பாணியை மாற்றி, உள்நாட்டுத் தொடர்களில் இருந்து அதிரடி பேட்டிங் மற்றும் திறமை வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்களை கண்டறிந்து சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு திருப்புவதே ஜாகீர் கானின் முக்கிய இலக்காக இருக்கும்.

Story first published: Friday, September 25, 2026, 12:02 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+