Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடா.. உங்க கொண்டாட்டத்துல என் பிள்ளை திண்டாடுதே.. சாக்ஷி டோணியின் கவலை!

ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷிக்கு இப்படி ஒரு சங்கடத்தை அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை டி20 போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோஹ்லி அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டம் டோணியின் மனைவி சாக்ஷிக்கு இடையூறாக இருந்துள்ளது.

வாழ்த்துக்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சாக்ஷி டோணி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பட்டாசுகள்

எங்கள் வீட்டிற்கு வெளியே கூட்டம் கூடியுள்ளது. ஹார்ன் அடிப்பதுடன் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். உற்சாக கரகோஷமிடுகிறார்கள். தூங்கும் என் மகளை நீங்கள் எழுப்பப் போகிறீர்கள் என்று ட்வீட்டியுள்ளார் சாக்ஷி.

அப்பா டோணி

இது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி என்பதை புரிந்து கொள்ளும் வயது இல்லை என் மகளுக்கு. ஒரு நாள் கூறுகிறேன். என் மகளுக்கு அவரது தந்தை என்ன செய்கிறார் என தெரியாது என்று சாக்ஷி ட்விட்டரில் கூறியுள்ளார்.

சாக்ஷி

சாக்ஷி அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவதுடன், மகள், கணவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 20, 2016, 13:50 [IST]
Other articles published on Mar 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+