Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றாகத்தான் பவுலிங் செய்தார்.. ஆனாலும்.. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நடராஜன்.. என்னாச்சு?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடமில்லை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார்.

முக்கியமாக வலைப்பயிற்சியில் இவர் ரஹானே, புஜாரா ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். மற்ற வீரர்களை விட வலைப்பயிற்சியில் இவர் அதிகம் நம்பிக்கை அளித்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடராஜனுக்கு பதிலாக சைனி அணியில் இடம்பெற்றுள்ளார். வலைப்பயிற்சியில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை என்றாலும் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்திய அணியில் சைனி எடுக்கப்பட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. சைனியின் தேர்வுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் சைனி தேர்வாக பின்வரும் மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளது.

 காரணம் 1

காரணம் 1

அதன்படி சைனிக்கு முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அதிகம் அனுபவம் இருக்கிறது. ரஞ்சி போட்டிகளில் நன்றாக ஆடி உள்ளார். நீண்ட நேரம் களத்தில் இருந்த அனுபவம் இருப்பதால் நடராஜனுக்கு பதிலாக சைனி தேர்வாகி உள்ளார்.

காரணம் 2

காரணம் 2

அதேபோல் சைனி நடராஜனை விட வேகமாக பவுலிங் செய்ய கூடியவர். சைனியால் நடராஜன் போல யார்க்கர் வீச முடியாது. ஆனால் சைனியின் பவுன்சர் மூலம் ஆஸ்திரேலியாவின் டெய்ல் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்த முடியும். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரணம் 3

காரணம் 3

இன்னொரு பக்கம் நடராஜனை இந்திய அணியின் டி 20 மற்றும் ஒருநாள் பவுலராக பயன்படுத்தவே இந்திய அணி விரும்புகிறது. இதனால் நடராஜனை டெஸ்ட் அணியில் பயன்படுத்தும் எண்ணம் அணி நிர்வாகத்திற்கு இல்லை. குறைந்த ஓவர் பார்மட் போட்டிகளில் மட்டும் நடராஜனை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Story first published: Wednesday, January 6, 2021, 15:18 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+