IND VS NZ : என்னது பாண்டியாவா…? அப்ப தோனி எங்கே? நிலைமை தெரியாமல் கோலியை கலாய்த்த மஞ்சரேக்கர்
Recommended Video
மான்செஸ்டர்: தாக்குதல் ஆட்டம் விரும்புவதாலேயே தோனிக்கு முன்பான பாண்டியாவை கோலி களம் இறக்கி விட்டிருக்கிறார் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கேலி செய்திருக்கிறார்.
மான்செஸ்டர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் இலக்கை விரட்டுதலில் திணறி வருகிறது. 3வது ஆட்டக்காரராக கோலி, 4வதாக பன்ட் ஆகியோர் களம் இறக்கப் பட்டனர். 5வது இடத்தில் வழக்கம் போல தோனி வர வேண்டும்.
ஆனால், மாறாக தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டார். இருக்கட்டும்... 6வது இடத்திலாவது தல தோனி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியா வந்தார்.

வாய்ப்பை கோட்டைவிட்டார்
இந்நிலையில் ரிஷப் பன்ட் தமக்கு விட்ட கேட்சை அருமையான வாய்ப்பு என்பதை பற்றி நினைத்து, அதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 32 ரன்கள் எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார். அந்த விக்கெட்டுக்கு பிறகே களத்தில் தோனி இறக்கப்பட்டார்.

தோனி இடம்
பொதுவாகவே, கள நிலவரத்துக்கு ஏற்ப, 5, 6, அல்லது 7ம் நிலையில் தோனி இறக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் மாற்றி இறக்கப்பட்டார் தோனி. இது பலருக்கு ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியது.
மஞ்சரேக்கர் பதில்
இதே கேள்வியை வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்டுவிட்டு, தானே அதற்கு டுவிட்டரில் பதிலும் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: சரி, தோனிக்கு முன்பாக பாண்டியா ஏன் இறக்கப்பட்டார் என்று நான் யூகிக்க முயற்சிக்கிறேன்.

தாக்குதல் ஆட்டம்
தாக்குதல் ஆட்டமா? அல்லது தடுப்பாட்டமா என்று வரும் போது, கோலி எப்போதும் தாக்குதல் ஆட்டத்தையே மேற்கொள்வார். அதனால்தான் தோனிக்கு முன்பாக பாண்டியா இறக்கப்பட்டுள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications