Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை டீமில் எடுத்தது.. வாய்ப்பு கொடுக்கப்பதற்கு அல்ல.. காரணமே வேறு..மூத்த வீரருக்கு பிசிசிஐ செக்!

சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுத்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரை அடுத்து தற்போது இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் ஆடும் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை. ஆனால் மொத்தமாக அறிவிக்கப்பட்ட அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.

ஏன்

ஏன்

டெஸ்ட் அணி அறிவிப்பில் பவுலிங் செய்யாத பாண்டியா இடம்பெற்றது ஏன் என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் பாண்டியாவை அணியில் எடுத்ததே அவரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கண்காணிக்க உள்ளனர்.

மீண்டும் வருவார்

மீண்டும் வருவார்

காயம் காரணமாக ஒரு வருடமாக பாண்டியா பவுலிங் செய்யவில்லை.இதனால் இந்திய அணியில் ஒரு ஆல் ரவுண்டர் குறைவாக இருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியா மீண்டும் பவுலிங் செய்ய போகிறார். டி 20 உலகக் கோப்பையில் இவர் கண்டிப்பாக பவுலிங் செய்வார் என்று கூறப்படுகிறது.

சில காலம்

சில காலம்

இவர் சில காலம் பவுலிங் செய்ய கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தி இருந்தார். இந்த அவகாசம் தற்போது முடிகிறது. இதனால் பாண்டியா மீண்டும் பவுலிங் பயிற்சி செய்ய இருக்கிறார். இதற்காகவே அவர் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார்.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணியில் பாண்டியாவை கொண்டு வந்த அவருக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் பயிற்சி கொடுக்க உள்ளனர். மீண்டும் பாண்டியாவை ஆல் ரவுண்டராக களமிறக்க உள்ளனர். இதன் காரணமாகவே அவரை தற்போது பிசிசிஐ கண்காணித்து வருகிறது என்கிறார்கள்.

Story first published: Thursday, February 4, 2021, 12:26 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+