Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் சங்கர், கேதர் ஜாதவ் வேஸ்ட்.. ஏன் வச்சிருக்கீங்க..? இவரை புடிச்சு உள்ள போடுங்க..

Recommended Video

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

லண்டன்: இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், எதிலும் பங்களிக்காத விஜய் சங்கர் மற்றும் ஜாதவ் ஆகியோர் அணியில் ஏன் இன்னும் நீடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை.

அரையிறுதி உறுதி

அரையிறுதி உறுதி

இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவது உறுதியாகிவிடும். உலக கோப்பையில் இதுவரை தோல்வியே தழுவாத ஒரு அணி இந்தியா. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் கை கொடுத்தனர்.

பவுலர்கள் காரணம்

பவுலர்கள் காரணம்

அதேபோல் கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலர்கள் வெற்றிக்கு காரணமாகினர். இப்படி இரண்டிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் தொடர் வெற்றிகளை குவிக்க முடிகிறது.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டி ஒரே விஷயம் என்னவென்றால், தற்போது வரை நடுத்தர பேட்டிங் சரிவர அமையவில்லை. இதனை சரி செய்யும் பட்சத்தில் வரும் போட்டிகளில் இந்திய அணியை அசைப்பது பெரும் கடினமாக எதிரணிகளுக்கு அமையும்.

புரிதல் குறைவு

புரிதல் குறைவு

தவான் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, இந்திய அணிக்கு இதுவரை சரியான துவக்கம் அமையவில்லை. ராகுல் நன்கு ஆடினாலும் ரோகித் சர்மா உடன் இணைந்து ஆடுவதில் சரியான புரிதல் இல்லை என்பது கடந்த இரு போட்டிகளிலேயே தெளிவாக காணலாம்.

அழகான ஸ்கோர்

அழகான ஸ்கோர்

எனினும் மற்ற வீரர்கள் கைகொடுக்க, இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட முடிகிறது. அதேபோல் பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டால் சொற்ப ரன்களில் எதிரணியை சுருட்டி வீச முடிகிறது.

வாகன் கருத்து

வாகன் கருத்து

இந்திய அணியின் செயல்பாட்டை கண்டு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இத்தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் அணி உலக கோப்பையை வெல்லும் என்று கூறி உள்ளார்.

பன்ட்டை எடுங்கள்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் இன்னும் ரிஷப் பன்ட்டை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. பன்ட் ஒரு சிறந்த வீரர் அவரை உலக கோப்பை அணியில் சேர்க்காதது குழப்பம் அளிக்கிறது.

இவர்கள் எதற்கு?

மேலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், அந்த வெற்றிக்கு பங்களிக்காத விஜய் சங்கர் மற்றும் ஜாதவ் ஆகியோர் அணியில் இன்னும் நீடிக்கிறார்கள். ஆனால் அணிக்கு வெற்றியை தர கூடிய பன்ட் வெளியே அமர்ந்திருக்கிறார். அதனால் அவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்றார்.

Story first published: Friday, June 28, 2019, 13:38 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+