Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ட்விட்டரில் "திடீர்" டிரெண்டாகும் ஜடேஜா.. ஏன்? - கேட்டா நீங்களும் "யெஸ்" சொல்லுவீங்க

சவுத்தாம்ப்டன்: ட்விட்டரில் கடந்த சில மணி நேரங்களாக ரவீந்திர ஜடேஜா டிரெண்டாகி வருகிறார். எங்கு பார்த்தாலும் ஜடேஜா, ஜடேஜா.. ஏன்?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

நியூசிலாந்துக்கு ஏற்ற ஆடுகளம், கிளைமேட், கண்டிஷன்ஸ், இங்கிலாந்தை அதன் மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது என்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காற்று முழுக்க முழுக்க நியூசிலாந்து பக்கமே வீசுகிறது. இந்தியாவின் பக்கம், நாம் இப்போதைய நிலையில் விசிறி வைத்து காற்றை உருவாக்க வேண்டும் போல.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

சரி விஷயத்துக்கு வருவோம்.. நாளை வெயிட்டான இறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், பல இந்திய மூத்த வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், கிரிக்கெட் அனலிஸ்ட்கள் என்று பலரும் தங்களது பிளேயிங் லெவலை தேர்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்திருக்கும் நிலையில், பல வீரர்கள் தங்கள்து பிளேயிங் லெவனை வெளியிட்டு வருகின்றனர்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

அந்த வகையில், இந்திய வீரர்களானாலும் சரி, வெளிநாட்டு வீரார்களானாலும் சரி... அனைவரது பிளேயிங் லெவனிலும் தவறாமல் இடம்பிடித்திருப்பது ரவீந்திர ஜடேஜா தான். லோ ஆர்டரில் ஜடேஜா நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று அனைவரும் ட்வீட் செய்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில் தற்போது ஜடேஜாவின் பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.

நான்கு ஃபாஸ்ட்

நான்கு ஃபாஸ்ட்

குறிப்பாக, இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மழையின் குறுக்கீடு கண்டிப்பாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று அதிகம் வீசும் என்றும் தெரிகிறது. இதனால், நான்கு ஃபாஸ்ட் பவுலர்கள், ஒரு ஸ்பின்னர் என்று அணியை தேர்வு செய்வதே சிறந்தது என்று ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட சிலர் கூறிவரும் நிலையில், பிளேயிங் லெவனில் கண்டிப்பாக ஜடேஜாவின் பெயர் இருக்க வேண்டும் என்று சீனியர் வீரர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜடேஜா ஈஸ் மஸ்ட்

ஜடேஜா ஈஸ் மஸ்ட்

அதற்கு அஷ்வினை வெளியே உட்கார வைக்கலாம் என்பதும், இவர்களது வாதமாக உள்ளது. சவுத்தாம்ப்டன் கண்டிஷன் வேகப்பந்துவீச்சு ஆதரவாக இருப்பதால், ஸ்விங் அதிகம் ஆகும். வானிலையும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இருப்பதால், நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. அப்படி ஆடும் பட்சத்தில், பேட்டிங்கில் அஷ்வினை விட சிறந்தவராக இருக்கும் ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, ஜடேஜா மிகப்பெரிய ஃபீல்டரும் கூட. நிச்சயம் அவர் ஒரு தனி நபராக 40 - 50 ரன்கள் வரை இந்தியாவுக்கு மிச்சம் பிடிக்கலாம் என்பதால், ஜடேஜா ஈஸ் மஸ்ட் என்கின்றனர். ரசிகர்களின் கருத்தும் அதுவாகவே இருக்க, ஜடேஜா இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறார்.

Story first published: Thursday, June 17, 2021, 14:00 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+