அந்த 3 பேரு தான் பிரச்சினையே.. ஆர்சிபி-க்கு தலைவலியாக போன கேப்டன்சி..அறிவிப்பில் ஏன் இவ்வளவு தாமதம்
பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால், அனைத்து அணிகளும் கேப்டன் யார்?, அணி ஜெர்ஸி என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகிறது.

குழப்பத்தில் ஆர்சிபி
ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. விராட் கோலிக்கு நிகராக அணியை வழிநடத்தி செல்ல முக்கிய வீரர்கள் அணிக்குள் இருக்கின்றனர். எனினும் ஏன் இவ்வளவு தாமதம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதற்காக நீண்ட ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.

உண்மை காரணம் என்ன
இந்நிலையில் ஆர்சிபியின் குழப்பத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், அணியின் கேப்டன்சிக்கு பல தேர்வுகள் எங்களிடம் உள்ளது தான் இப்போது பிரச்சினையே. தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் என நீண்ட அனுபவம் கொண்ட வீரர்கள் அணிக்குள் இருக்கின்றனர். அதில் இருந்து தான் நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.

மூவருமே சிறந்தவர்கள்
தினேஷ் கார்த்திக்கிற்கு கோலி குறித்தும், ஆர்சிபி நிர்வாகம் குறித்தும் நன்கு தெரியும். மேலும் அனுபவம் கொண்டவர். கடந்தாண்டு முதல் மேக்ஸ்வெல் ஆர்சிபியின் தூணாக உருவெடுத்துள்ளார். மற்றொரு புதிதாக வந்துள்ள டூப்ளசிஸுக்கு தென்னாப்பிரிக்க அணியையே வழிநடத்திய அனுபவம் இருக்கிறது. இதுதான் தற்போது பெரிய பிரச்சினை.

கோலியின் தலையீடு
இந்த மூவரின் கேப்டன்சி, மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்த்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்காக முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்தும் அறிவுரைகளும் பெறப்பட்டு வருகின்றன. எனவே அவரின் விருப்பத்தின் பேரில் தான் புதிய கேப்டன் வருவார் என்பது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications