Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது..! எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..? குறை சொன்ன பிசிசிஐ

Recommended Video

Jonty rhodes Indian Coach : இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்

மும்பை: ஜான்டி ரோட்ஸ் வெளிநாட்டுக்காரர். அவரால் இந்தியாவில் வருடம் முழுவதும் தங்கி இருக்க முடியாது என்பதால் பீல்டிங் கோச்சாக செலக்ட் பண்ண வில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

கடந்த உலக கோப்பையுடன் ரவிசாஸ்திரி மற்றும் சக பயிற்சியாளர்கள் பதவி காலம் முடிவுற்றது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டு உள்ளது.

பயிற்சியாளர் தேர்வு

பயிற்சியாளர் தேர்வு

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு வரை, சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமித்து கபில்தேவ் தலைமையிலான குழு அறிவித்தது.

குழு தேர்வு

குழு தேர்வு

இந்நிலையில், துணை பயிற்சியாளர் பணியிடங்களை சீனியர் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்கிறது. சரண் தீப் சிங், ககன் கோடா, ஜதின் பரன்ஜாபி மற்றும் தேவங் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேர்காணலும், அறிவிப்பும்

நேர்காணலும், அறிவிப்பும்

அதற்கான நேர்காணல் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. பேட்டிங் பயிற்சியாளராக 14 பேரும், பவுலிங் பயிற்சியாளராக 12 பேரும், பீல்டிங் பயிற்சியாளராக 9 பேரும் விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 3 பதவிகளுக்கும் தலா 3 பேரை தேர்வு செய்து பிசிசிஐ அறிவித்தது. அதில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வானார். பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர், அபய் ஷர்மா மற்றும் டி.திலிப் ஆகியோரும் இறுதி செய்யப்பட்டனர். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த பீல்டிங் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ் போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக பல சர்வதேச அணிகளுக்கும், மும்பை இந்தியன்ஸ் போன்ற ஐபிஎல்லின் சிறந்த அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்ட ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பிரசாத் பதில்

பிரசாத் பதில்

அதற்கு தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் பதிலளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் முன்னணியில் இருந்தார் . அவர் இந்திய அணிக்கும், இந்திய ஏ மற்றும் இளம் வீரர்கள் அணிக்கும் பயிற்சி அளிப்பார்.

முடியாது

முடியாது

மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் வந்து அவர் பயிற்சி அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஜான்டி ரோட்ஸ் எடுக்கப்பட்டால் இவ்வளவு வேலைகளை அவர் செய்வாரா என்று தெரியவில்லை. தவிர அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். இந்தியாவில் தங்கி வருஷம் முழுவதும் பயிற்சி அளிக்க முடியாது. அதனால் அவரை செலக்ட் செய்யவில்லை என்றார்.

Story first published: Friday, August 23, 2019, 17:08 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+