Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? இனி ஒருநாள், டி20 அணியில் கிடையாதா? பிசிசிஐ விளக்கம்

மும்பை : இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இரு அணிகளிலும் இடம்பெறவில்லை. இதனால், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாக சிறப்பாக செயல்படாத பண்ட் நீக்கப்பட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று, இலங்கை தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதனால் பண்ட்க்கு ஓய்வு வழங்கப்பட்டதா என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

சொல்லப் போனால், வெறும் ஒரு ட்வீட்டை வைத்து அணியை அறிவித்திருக்கிறார்கள். தேர்வுக்குழுவினர் செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

ரிஷப் பண்ட், ஒருநாள், டி20 போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். இந்தியா தடுமாறும் போது எல்லாம் பேட்டிங்கில் வந்து காப்பாற்றினார். இதனால் பண்ட் பார்ம்க்கு திரும்பி விட்டார் என எதிர்பார்த்த நிலையில், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ரிஷப் பண்ட் தற்போது துபாயில் தோனியுடன் விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து பிசிசிஐ திரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும், என்ன நடந்திருக்கிறது என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. இஷான் கிஷன் அடித்த ஒரே ஒரு இரட்டை சதம் தான் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவானின் இடத்திற்கு ஆப்பு வைத்திருக்கிறது.

காலில் பிரச்சினை

காலில் பிரச்சினை

மேலும் ரிஷப் பண்டை ஒரே அடியாக அணி நிர்வாகம் நீக்கவில்லை. ரிஷப் பண்ட்க்கு தற்போது காலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் வங்கதேசத்திற்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த காயத்திலிருந்து குணமடையவும், பிறகு காலில் உள்ள தசைகள் வலுப்பெற தனி பயிற்சியை எடுக்கவும் பண்ட்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய நபர்

முக்கிய நபர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் முடிவை பொருத்தே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பது தெரிய வரும். இதனால் ப்ண்ட் டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் என்பதால், தனது உடல் தகுதியை மேம்படுத்தி கொள்ள தான் அவர் டி20, ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என பிசிசிஐ வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, December 28, 2022, 10:18 [IST]
Other articles published on Dec 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+