Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரருக்கு தொடரும் துரோகம்..!! இவ்வளவு ரன்கள் அடித்தும் வாய்ப்பு இல்லை..?? என்ன பிரச்சினை?

சென்னை: இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதில் தமிழக வீரர் ஷாரூக்கான் பெயர் இடம்பெறவில்லை.

அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் ஷாரூக்கான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

தமிழக வீரர் என்றால் ஒரு தலைப்பட்சமாக பிசிசிஐ செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரூ.9 கோடி

ரூ.9 கோடி

உயரமான அதிரடி வீரர், ஆட்டத்தின் போக்கை தனி ஆளாக மாற்றும் திறமை, அதிரடி சரவெடியான பேட்டிங் என ஃபினிஷருக்கு தேவையான அனைத்து தகுதியும் உடைய வீரர் ஷாரூக்கான்.இதனால் ஐபிஎல் ஏலத்தில் 40 லட்சம் இருந்த அவரது அடிப்படை விலை, 9 கோடி வரை சென்றது.

இடமில்லை

இடமில்லை

தென்னாப்பிரிக்க தொடருக்கான் அணி அறிவிப்பின் போது பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடரில் ஷாரூக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷாரூக்கான் மாற்று வீரராக தான் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது இலங்கை தொடரில் ஷாரூக்கான் பெயர் இல்லை.

194 ரன்கள்

194 ரன்கள்

இத்தனைக்கும் நேற்று ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 162 ரன்களுக்கு 5 விக்கெட் என்று தடுமாறிய போது ஷாரூக்கான் 148 பந்துகளில் 194 ரன்கள் குவித்து அசத்தினார். விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் அலி கோப்பை என அனைத்து தொடரிலும் கலக்கி வருகிறார்.

யாருக்கு நஷ்டம்?

யாருக்கு நஷ்டம்?

மேலும் இந்திய அணியில் இடத்தை பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சையும் ஷாரூக்கான் கற்று வருகிறார். ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இலங்கை தொடரில் நீக்கப்பட்டதன் மூலம் ஷாரூக்கானுக்கு டி20 உலககோப்பை அணியில் இடம் கிடைக்காது என்று தெளிவாக தெரிகிறது. இதனால் யாருக்கு நஷ்டம்.??

Story first published: Sunday, February 20, 2022, 17:08 [IST]
Other articles published on Feb 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+