754 ரன்கள் குவித்தும் ஐசிசி தரவரிசை பட்டியலில் 4 இடங்கள் சுப்மன் கில் சரிந்தது ஏன்?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில், இங்கிலாந்து எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சதமும், அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் பிராட்மேனுக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பல சாதனைகளை கில் படைத்தார்.
இந்த நிலையில் 754 ரன்கள் குவித்த சுப்மன் கில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் டாப் 10 இடத்திற்கு கூட அவர் இல்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒன்பதாவது இடத்திலிருந்து அவர் தற்போது நான்கு இடங்கள் சரிந்து 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இது ஏன்? ஐசிசி டெஸ்ட் தரவரிசை எப்படி இயங்குகிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஐசிசி தங்களது டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிடும். இந்த ஒரு வாரத்தில் போட்டிகள் ஏதேனும் நடைபெற்று வீரர்கள் எவ்வாறு அதில் செயல்படுகிறார்கள் என்பதை வைத்து தரவரிசை ரேட்டிங்ஸ் வழங்கப்பட்டு பட்டியல் மாற்றப்படும்.
அந்த வகையில் ஐந்தாவது டெஸ்டில் கில் வெறும் 32 ரன்கள் தான் அடித்து இருந்தார். கில் கடைசி டெஸ்டில் குறைந்தபட்சம் ஒரு 50 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் அடித்து இருந்தால் அவர் ஒன்பதாவது இடத்திலே நீடித்து இருந்திருப்பார்.இதனால் தான் அவருடைய புள்ளிகள் குறைந்து தர வரிசையில் நான்கு இடங்கள் பின்தங்கி இருந்தார்.
அதே சமயம் ஐந்தாவது டெஸ்டில் சிராஜ் ,பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களுடைய தரவரிசை புள்ளிகள் ஏறி பட்டியலிலும் முன்னேற்றம் அடைந்தனர். இதனால் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15வது இடத்திலும் பிரசித் கிருஷ்ணா 25 இடங்கள் முன்னேறி 59வது இடத்தை பிடித்தனர்.


Click it and Unblock the Notifications