Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பையனுக்கு ஏன் 70 ரன்கள் அடித்தாலே கால் இழுக்கிறது? 26 வயது இந்திய வீரர் குறித்து பிராடு கேள்வி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு பிரச்சினைகள் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் பேட்டிங்கில் இந்திய அணியை முன்னின்று வழிநடத்திய கில், மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதங்களுடன் 94 என்ற சிறந்த சராசரியிலும், கிட்டத்தட்ட 100 ஸ்டிரைக் ரேட்டிலும் ரன்களைக் குவித்தார். இருப்பினும், சுப்மன் கில்லுக்கு முதல் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் 70 ரன்களைக் கடந்த பின்னர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.

Shubman Gill

தொடரின் முதல் போட்டியில் அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மூன்றாவது போட்டியில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அடில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது குறித்து யூடியூப் சேனலில் பேசிய பிராட், "அவர் 70 ரன்களைத் தொடும்போதெல்லாம் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதனால் முதல் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் தனது சரியான பேட்டிங் ரிதத்தை இழந்தார்" என்று கூறினார்.

IND vs ZIM: டி20 தொடரை எந்த சேனல், ஒடிடியில் காணலாம்? நேரம்? நேருக்கு நேர் ரெக்கார்ட் என்ன?

IND vs ZIM: டி20 தொடரை எந்த சேனல், ஒடிடியில் காணலாம்? நேரம்? நேருக்கு நேர் ரெக்கார்ட் என்ன?

"கில் பேட்டிங் செய்யும்போது நீங்கள் அவருடன் அதிகம் பேச முடியாது. முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக ஸ்ரேயாஸ் ஐயர்தான் என்னிடம் கூறினார். அகமதாபாத்தின் 40 டிகிரி வெப்பத்தில் விளையாடி பழகிய அவருக்கு, இங்கிலாந்தின் குளிர்ந்த வானிலையிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை."

"ஒருவேளை அவருக்கு ஏதேனும் உட்புறக் காயம் இருக்கலாம். ஆனால் அது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் அவரது ரன் குவிக்கும் வேகத்தைக் குறைத்து, அவர் விக்கெட்டை இழக்கவும் வழிவகுத்தது" என்றார்.

மணிக்கு 154 கிமீ வேகத்தில் பந்துவீசிய அசோக் சர்மா.. ஜிம்பாப்வே தொடரில் சாதிப்பாரா? சிராஜ் குறித்து நெகிழ்ச்சி

மணிக்கு 154 கிமீ வேகத்தில் பந்துவீசிய அசோக் சர்மா.. ஜிம்பாப்வே தொடரில் சாதிப்பாரா? சிராஜ் குறித்து நெகிழ்ச்சி

"அவரது ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள் நம்ப முடியாததாக உள்ளன. பர்மிங்காமில் கில்லின் சாதனை முதன்முதலில் திரையில் காட்டப்பட்டபோது அவரது சராசரி கிட்டத்தட்ட 60 ஆக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதை வாசிப்பதற்கு முன் நான் இரண்டு முறை சரிபார்க்க வேண்டியிருந்தது. வெறும் 10 போட்டிகளில் அவர் இந்த 60 சராசரியை வைத்திருக்கவில்லை, அதுதான் இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம்" என்று பிராட் கூறினார்.

Story first published: Wednesday, July 22, 2026, 12:42 [IST]
Other articles published on Jul 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+