Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்.. வலைப்பயிற்சியில் நன்றாக பந்து வீசினாலும்.. நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை.பின்னணி

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மூத்த வீரர் ஷமி காயம் அடைந்த நிலையில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிக முக்கியமான பவுலர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஆட்டத்தின் போது பாதியில் வெளியேறினார்.

இவர் அதன்பின் ஷமி பவுலிங் செய்யவில்லை. இவரின் கையில் இருக்கும் எலும்பில் சின்ன முறிவு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இதனால் இவர் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பேட்டிங் செய்த போது இவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. பந்து வேகமாக வந்து கையில் மோதியதில் இவரின் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இவர் அணியில் இடம்பெற மாட்டார்.

காயம்

காயம்

மூத்த வீரர் ஷமி காயம் அடைந்த நிலையில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். அதன்பின் டெஸ்ட் போட்டிக்கான நெட் பயிற்சியில் இவர் சிறப்பாக பந்து வீசினார்.

நெட் பயிற்சி

நெட் பயிற்சி

முதல் போட்டிக்கு முன்பான நெட் பயிற்சியில் நடராஜன் சிறப்பாக பந்து கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் நடந்த வலைப்பயிற்சியில் புஜாரா, ரஹானே ஆகியோரின் விக்கெட்டை நடராஜன் எடுத்தார். இதனால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால்

ஆனால்

ஆனால் இவர் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் இவருக்கு பதிலாக முகமது சிராஜுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. விதிப்படி முதல்தர போட்டிகளில் சிராஜ்தான் நன்றாக பவுலிங் செய்துள்ளார். முதல் தர போட்டிகளில் நடராஜனை விட சிராஜ் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார்.

ரஞ்சி

ரஞ்சி

ரஞ்சி போட்டிகளில் சிராஜ் சிறப்பாக ஆடி உள்ளார். டெஸ்ட் பயிற்சி ஆட்டத்திலும் சிராஜ் நன்றாக ஆடி உள்ளார். இதை கருத்தில் கொண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் நடராஜனுக்கு பதிலாக சிராஜுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, December 25, 2020, 14:18 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+