For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றியை பறித்ததா அந்த 4 ஓவர்கள்..,? எப்படி… என்ன நடந்தது? அதிர்ச்சி விலகாத தென் ஆப்ரிக்கா

Recommended Video

World Cup 2019 SAvsBAN | கேட்ச்சில் தப்பித்து, விக்கெட்டை பறிகொடுத்த டி காக்!

லண்டன்:தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் தான் வங்கதேச அணியின் வெற்றியை தீர்மானித்திருக்கின்றன.

உலக கோப்பை தொடரில் மீண்டும் அதிர்ஷ்டமில்லாத அணி என்ற பெயரை பெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது தென்ஆப்ரிக்கா. வங்க தேசத்துடனான முடிவு தான் அந்த அணியை அப்படி யோசித்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது வங்கதேசம். லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆடிய வங்கதேசம் நிதான, அதே சமயத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம் அனுபவ ஜோடியின் பொறுப்பான ஆட்டம், இறுதி கட்ட நேரத்தில் மகமதுல்லாவின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 330 ரன்களை குவித்தது. 331 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 309 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வங்கதேசம் வெற்றி

வங்கதேசம் வெற்றி

இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. மிகப்பெரிய இலக்கு என்பதால் மிகுந்த கவனத்துடன் தான் சேசிங் இன்னிங்சை தொடங்கியது தென் ஆப்ரிக்கா.டுபிளெசிஸ், மார்க்ராம், மில்லர், வான்டர் டசன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

4 ஓவர்களில் திருப்பம்

4 ஓவர்களில் திருப்பம்

ஆனால், எதிர்பார்த்த அளவு அது பலிக்கவில்லை. இரு அணிகளுமே சிறப்பாக தான் ஆடின. இருப்பினும், வங்கதேச அணியின் இன்னிங்சில் கடைசி 4 ஓவர்கள் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக இருந்திருக்கிறது. ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம் ஜோடி பிரிந்தவுடன் வங்கதேச பேட்டிங்கில் தொய்வு உருவானது.

அதே 276 ரன்கள்

அதே 276 ரன்கள்

46 ஓவர் முடிவில் வங்கதேச அணியின் ஸ்கோர் 276. கடைசி 4 ஓவர்கள் தான் வங்கதேசத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. அப்போது மகமதுல்லாவின் அதிரடி கை கொடுத்தது. 4 ஓவர்கள்.... 54 ரன்கள்... வங்க தேசம் 300 ரன்களை கடக்க உதவியது.

அதிரடி ரன் மழை

அதிரடி ரன் மழை

47வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் வந்தது. 48வது ஓவரில் 11 ரன்கள், 49 மற்றும் 50 ஆகிய இரண்டு ஓவர்களிலும் தலா 14 ரன்களும் வந்தன. கடைசி 4 ஓவர்களில் மகமதுல்லா அதிரடி தான் வங்கதேச அணியின் ஸ்கோர் 330 ரன்கரள எட்ட உதவியது.

தென் ஆப்ரிக்கா தோற்றது

தென் ஆப்ரிக்கா தோற்றது

வங்கதேசம் போன்று அதிரடியாக 4 ஓவர்களில் ரன்களை குவிக்க முடிய வில்லை. அதே நேரத்தில் டும்னி மட்டும் தான் கொஞ்சம் வலுவாக ஆடக்கூடிய வீரராக இருந்தார். மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாகவும் பேட்டிங் செய்ய வில்லை. விளைவு... வங்கதேச அணியுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருக்கிறது.

 பலமுறை சொதப்பல்

பலமுறை சொதப்பல்

பதற்றமான நேரத்தில் சொதப்புவது என்பது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் விளையாட்டில் பழகி போன ஒன்று. 1999ம் ஆண்டு அரையிறுதி போட்டியை கூறலாம். ஆஸி அணியின் 213 என்ற ஸ்கோரை தொட்டது தென் ஆப்ரிக்கா. கைவசம் 4 பந்துகள், ஒரு விக்கெட் பாக்கி.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

தென் ஆப்ரிக்கா தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்த்த வேளையில் பதற்றம் அடைந்து இருந்த ஒரு விக்கெட்டையும் இழந்து, இறுதி போட்டி வாய்ப்பை கோட்டை விட்டனர். கோப்பையையும் கைவிட்டனர். எனவே, தென் ஆப்ரிக்க அணிக்கு இது ஒன்றும் புதிது அல்ல என்று சொல்லலாம்.

Story first published: Monday, June 3, 2019, 14:20 [IST]
Other articles published on Jun 3, 2019
English summary
Why south Africa defeated? The game changing over’s against Bangladesh.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+