Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஸ்பின்னர்களுடன் செல்வது மிக ஆபத்து.. ராகுல் டிராவிட் எடுப்பது தவறான முடிவா.. 3 முக்கியமான காரணங்கள்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் இது பெரும் ரிஸ்க்கான முடிவு என தெரியவந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடனான இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இதில் வெற்றி கண்டால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

4 ஸ்பின்னர்கள்

4 ஸ்பின்னர்கள்

இந்த முக்கியமான போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க ராகுல் டிராவிட் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக்பூர் பிட்ச்-ல் புற்களை முற்றிலுமாக நீக்கிவிட்டு, வரண்டு காணப்படுவதால் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்களையும் கொண்டு வர முடிவெடுத்துள்ளனர். ஆனால் இது தவறாக முடிவதற்கு 3 முக்கிய காரணங்கள் உண்டு.

ரிவர்ஸ் ஸ்விங் வாய்ப்பு

ரிவர்ஸ் ஸ்விங் வாய்ப்பு

4 ஸ்பின்னர்களை கொண்டு வந்தால், ப்ளேயிங் 11ல் மீதம் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்திருக்க முடியும். ஸ்பின்னர்களுக்கு ஏற்ற களமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளின் போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். அப்போது மளமளவென விக்கெட் விழலாம். அந்த சமயத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. கடந்த 2010ம் ஆண்டு இதே நாக்பூரில் நடந்த ஒரு போட்டியில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்திய போது தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் 7 விக்கெட்களை கைப்பற்றினார்.

வாய்ப்புகள் குறைவு

வாய்ப்புகள் குறைவு

இந்திய அணி சமீப காலமாக 3 ஸ்பின்னர்கள் வரை தான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால் அதிலும் 3வது ஸ்பின்னர் மிக குறைந்த வாய்ப்புகளையே பெறுவார். ஏனென்றால் முதன்மையான 2 ஸ்பின்னர்கள் மட்டுமே தொடர்ச்சியாக வீசி தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். உதாரணத்திற்கு 2021ம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்டில் 3 - 1 என இந்தியா வெற்றி கண்டது. அப்போது அக்‌ஷர் மற்றும் அஸ்வின் தான் கலக்கினர். ஆனால் 3வதாக இருந்த குல்தீப்பிற்கு வாய்ப்பு பெரியளவில் இல்லை. இப்படி இருக்கையில் 4வது ஸ்பின்னரை கொண்டு வந்து வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதா? என்ற கேள்வி உள்ளது.

வெரைட்டி இல்லை

வெரைட்டி இல்லை

இந்திய அணியில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் கொண்டு செல்வதால், வித்தியாசமான அட்டாக்கை செய்ய முடியாமல் போகலாம். முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற பவுலர்களுக்கு இந்திய களத்திற்கு ஏற்றார் போல பந்துவீச தெரியும். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் ஷமியும், உமேஷ் யாதவும் சுழற்பந்துவீச்சு களத்தில் எங்களால் வேகத்தில் சாதிக்க முடியும் என காட்டினர். எனவே வெரைட்டி வேண்டும் என்றால் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் வேண்டும்.

Story first published: Wednesday, February 8, 2023, 12:02 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+