அந்த 3 தமிழர்களும் வேண்டும்.. விடாப்பிடியாக நின்ற தேர்வுக்குழு.. கோலியின் மலைக்க வைக்கும் பிளான்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணியில் 3 தமிழர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் 5 டி 20 போட்டிகள் இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

டி 20 போட்டி வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணியில் 3 தமிழர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு கோலி அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்று விவரம் தெரிய வந்துள்ளது. தமிழக அணியில் மொத்தம் வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

வருண் சக்கரவர்த்தி
இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டதற்கு டிஎன்பிஎல் தொடரில் இவர்கள் ஆடிய விதமே காரணம் என்று கூறப்படுகிறது. மூன்று பேருமே டிஎன்பிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடி அனுபவம் கொண்டவர்கள். அனைத்து விதமான பிட்ச்களிலும் ஆடிய அனுபவம் கொண்டவர்கள் இவர்கள்.

அனுபவம்
அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் மூன்று வீரர்களும் கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகளுக்கு சிறப்பாக ஆடினார்கள். இந்த மூன்று பேருமே அந்தந்த அணிகளில் டாப் பவுலர்கள். இவர்களுக்கு அளப்பரிய டி 20 அனுபவம் உள்ளது.

டி 20
இதன் காரணமாக இவர்களை இந்தியாவின் அனைத்து டி 20 போட்டிகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று கோலி முடிவு செய்துள்ளார். இதனால் இவர்களுக்கு டிரெய்னிங் கொடுக்க வேண்டும் என்று கோலி முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே இவர்களை அணியில் எடுக்க கோலி பிடிவாதமாக இருந்துள்ளார்.

உலகக் கோப்பை
உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் இந்திய அணியில் இவர்கள் முக்கிய வீரர்களாக ஆட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடக்க உள்ளதால் இதில் பவுலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். இதனால்தான் இவர்களை கோலி அணிக்குள் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications