Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவிற்கு கீழ் தீயாக ஆடிய அந்த டீமா இது?.. கோலிக்கு கீழ் காணாமல் போன போராட்ட குணம்.. காரணம் ஈகோ!

சென்னை: ரஹானேவின் கேப்டன்சிக்கு கீழ் மிகவும் சிறப்பாக ஆடிய இந்திய அணி வீரர்கள் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணியுடன் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது படுதோல்வி அடைந்துள்ளது. கப்பா டெஸ்ட் வெற்றிக்கு பின் வந்த ஆனந்த கண்ணீரின் ஈரம் கூட காயாத நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.

மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒரு கேப்டனாக கோலிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

ரஹானே

ரஹானே

ரஹானேவின் கேப்டன்சிக்கு கீழ் மிகவும் சிறப்பாக ஆடிய இந்திய அணி வீரர்கள் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணியுடன் தோல்வி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வகையில் இந்திய அணியில் பெரிய வீரர்கள் எல்லாம் இல்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இருக்கிற வீரர்களை வைத்தே இந்திய அணி சிறப்பாக வென்றது. மூத்த வீரர்கள் காயம் அடைந்த போது கூட இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி தேடி தந்தனர். அதிலும் பும்ரா, கோலி, இஷாந்த், சமி, கடைசி போட்டியில் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாமல் கூட இந்திய அணி வென்றது.

 கோலி

கோலி

ஆனால் கோலிக்கு கீழ், அதுவும் சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. அஸ்வின், பும்ரா, இஷாந்த் ஆகியோர் அணிக்கு திரும்பி வந்த பின்பும் கூட இந்திய அணி வெற்றிபெறாமல் தோல்வி அடைந்துள்ளது. கோலிக்கு கீழ் இந்திய டெஸ்ட் அணி கடந்த 4 போட்டிகளாக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 11 போட்டிகளில் 8 போட்டியில் இந்தியா கோலியின் கேப்டன்சியின் கீழ் தோல்வி அடைந்துள்ளது.

 காரணம்

காரணம்

ரஹானேவிற்கு கீழ் இந்திய வீரர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் சுதந்திரமாக கருத்து சொல்கிறார்கள். அதேபோல் அணி கூடி மொத்தமாக முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால் ரஹானேவிற்கு கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது.

 ஆனால் கோலி எப்படி

ஆனால் கோலி எப்படி

ஆனால் கோலிக்கு கீழ் இந்திய அணி வீரர்கள் குழு மனப்பான்மையோடு செயல்படுவது இல்லை. தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்வது. அஸ்வின், ரஹானே, புஜாரா, ரோஹித் போன்றவர்களிடம் கோலி விவாதம் செய்வது இல்லை. கோலியின் கீழ் இந்திய வீரர்கள் பயந்து பயந்து ஆடி வருகிறார்கள்.

பயம்

பயம்

அதேபோல் கோலியும் கூட விக்கெட் விழவில்லை என்றால் மற்ற வீரர்களிடம் அறிவுரை கேட்பது கிடையாது. விக்கெட் விழவில்லை என்றால் ஈகோ பார்த்துக்கொண்டு கோலி எதுவும் சொல்லாமல் இருந்துவிடுகிறார். இந்த தோல்வி மூலம் இந்திய அணியை கோலி நினைத்தபடி வழி நடத்தாமல் திணறுகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 17:17 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+