வைபவ் சூர்யவன்ஷி மீது தேவையில்லாத சுமை..கெடுக்க பார்க்கிறதா பிசிசிஐ? கிரிக்கெட் வல்லுனர்கள் வார்னிங்
கொல்கத்தா: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான East Zone அணியின் துணை கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகவே இதனைத் தேர்வுக் குழுவினர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ள துணை கேப்டன் பதவி தற்போதைக்கு அவர் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதற்காக அல்ல, மாறாக ஒரு கிரிக்கெட் வீரராக அவரது வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

எனினும் சிறுவயதில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்குவது அவருடைய ஆட்டத்தை பாதிக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 15 வயது சிறுவன் மீது ஏன் இவ்வளவு பெரிய பொறுப்பை தேர்வு குழுவினர் ஏன் சுமத்துகிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வைபவ் சூர்யவன்சி இப்போதுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும் அவர் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சில பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்கள் குவித்தாலும் கேப்டன்ஷிப் அவருடைய திறமையை பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது அவர் பேட்டிங்கில் சிறப்பாக ரன்கள் குவித்தாலும் கேப்டன்ஷியில் அவரால் ஒரு பேட்ஸ்மேன் போல் ஜொலிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி வைபவ் சூரியவன்சியையும் இப்படி மாட்டி விட்ட கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில் ஐபிஎல் தொடரில் விளையாடிய மிக இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்த அவர், அத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவரது பயமற்ற ஆட்டமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது அவர் தொடரின் சிறந்த வீரர் Player of the Series விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications

