Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷிக்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமே இந்த சீனியர் வீரர்தான்.. உதவி கோச் விளக்கம்

பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மூத்த வீரர் ஒருவர் தான் அதற்கு காரணம் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியன் டென் டோஸ்கேட் விளக்கம் அளித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்ததை அடுத்து, வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதவி பயிற்சியாளர் ரியன் டென் டோஸ்கேட் மூத்த வீரர் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு தான் காரணம் என குறிப்பிட்டார்.

Why Vaibhav Suryavanshi Missed His Debut in Ireland T20I Series Coach Ryan ten Doeschate Explains

"வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முற்றிலும் தயாராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு நமக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அவரது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் விளையாடுவார். ஆனால் மற்ற வீரர்களைப் போலவே அவரும் சில நடைமுறைகளைக் கடந்து வர வேண்டும்" என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 230-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைத்தார். மேலும் அந்த சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் மதிப்புமிக்க வீரர் விருதுகளையும் வென்றார். இதனால் இவரை சர்வதேச அரங்கில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

அயர்லாந்து தொடரில் படுதோல்வி.. உடனே சுப்மன் கில்லுக்கு ஆதரவாகப் பேசும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

அயர்லாந்து தொடரில் படுதோல்வி.. உடனே சுப்மன் கில்லுக்கு ஆதரவாகப் பேசும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி ஜூலை 1 முதல் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரில் சூர்யவன்ஷி அறிமுகமாகும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார். சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, June 29, 2026, 13:03 [IST]
Other articles published on Jun 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+