Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஏன் தாடியை எடுப்பதே இல்லை? தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

மும்பை: விராட் கோலி என்றாலே அவருடைய அதிரடி பேட்டிங்கும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். நீங்கள் கூகுளில் விராட் கோலி என்று தேடிப் பார்த்தால் அவருடைய அனைத்து புகைப்படத்திலும் தாடியுடன் தோன்றும் காட்சிகள் தான் இடம்பெற்றிருக்கும்.

37 வயதான விராட் கோலி ஃபேஷனில் அதிகம் கவனம் செலுத்துபவராக இருக்கின்றார். தன்னுடைய தலை முடியை வெட்டுவதற்காக சுமார் ஒரு லட்சம் வரை அவர் செலவிடுவார் அந்த அளவுக்கு விராட் கோலி தனது ஃபேஷன் ஸ்டைலில் கவனம் செலுத்துபவராக இருக்கின்றார்.

Virat Kohli

இப்படி இருக்கும்போது விராட் கோலி ஏன் தனது தாடியை முழுமையாக சேவ் செய்யாமல் இருக்கிறார் என்று தெரியுமா? ஆரம்ப காலத்தில் விராட் கோலி கிரிக்கெட் வந்த போது தாடி இல்லாமல் தான் இருந்தார்.ஆனால் சில காலம் போக போக விராட் கோலி தாடி லேசாக வளர்த்துக் கொண்டிருந்தார்.

மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய விராட் கோலி-அனுஷ்கா சர்மா! விலை எவ்வளவு தெரியுமா?

மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய விராட் கோலி-அனுஷ்கா சர்மா! விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு கட்டத்தில் விராட் கோலி சுத்தமாக எடுக்காமல் அதனை ஸ்டைலாக மாற்றி வலம் வருகிறார். தற்போது விராட் கோலிக்கு வயதாகி வரும் நிலையில் தாடியில் அங்கு அங்கு வெள்ளை நிற முடிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அப்படி இருக்கும்போது கூட அவர் தாடியை சேவ் செய்வது கிடையாது.

விராட் கோலியின் நண்பரான ரோகித் சர்மா கூட தாடி இல்லாமல் அடிக்கடி போட்டியில் பங்கேற்பார். தற்போது கூட அவர் கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கின்றார். ஆனால் விராட் கோலி கடைசியாக தாடியை சவரம் செய்து கிட்டத்தட்ட பத்து முதல் 15 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் விராட் கோலி தாடியை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் தனது மனைவிக்கு முழு மரியாதை கொடுக்கும் விராட் கோலி அவர் இட்ட கட்டளை காரணமாக தான் தாடியை எடுக்காமல் இருக்கின்றார். விராட் கோலியின் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்வதற்கு முன்பே காதலித்து வந்தனர்.

அப்போது நீ முழு தாடியுடன் இருந்தால் தான் அழகாக இருக்கின்றாய். நல்ல முதிர்ந்த முகம் இருக்கின்றது. ஆனால் இந்த தாடியை எடுத்து விட்டால் சிறு குழந்தை போல் மாறிவிடுகிறாய். இதனால் நீ எந்த காரணத்தைக் கொண்டும் தாடியை கிளீன் ஷேவ் செய்யக்கூடாது என்று அவருடைய மனைவி கூறி இருந்தார்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆசிரமத்திற்கு சென்றால், உங்களுக்கு என்ன வந்தது? முகமது ஷமி ஆதரவு

Also Read

விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆசிரமத்திற்கு சென்றால், உங்களுக்கு என்ன வந்தது? முகமது ஷமி ஆதரவு

மனைவி காதலியாக இருந்த போது சொன்ன வார்த்தையை அன்று முதல் இன்று வரை விராட் கோலி தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக தான் தாடியை கிளீன் ஷேவ் செய்யாமல் விராட் கோலி ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளிலும் காட்சி அளிக்கின்றார்.

Story first published: Friday, August 7, 2026, 18:14 [IST]
Other articles published on Aug 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+